மகளை மோசமாக விமர்சித்ததால் நண்பர்..ஃபிளாஸ்கினால் அடித்தே கொன்ற நபர்
இந்திய மாநிலம் கர்நாடகாவில் மகளை தவறாக பேசியதால் முன்னாள் நேபாள காவலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
காவலாளி
கர்நாடகாவின் சீகேஹள்ளியில் வசித்து வருபவர் தர்மேந்திர சிங். அதே பகுதியில் வசித்து வந்தவர் தேஜேஷ்வர்(40).
நேபாளத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் பெங்களுருவில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் இருவரும் பாருக்கு சென்று மது அருந்தியுள்ளனர். பின்னர் தர்மேந்திர சிங்குடன் தேஜேஷ்வர் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
மோசமாக பேசியதால் கொலை
அங்கு இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது, தர்மேந்திர சிங்கின் மகளைப் பற்றி தேஜேஷ்வர் மோசமாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தர்மேந்திர சிங் தன் நண்பரை கடுமையாக தாக்கியுள்ளார்.
மேலும் தெர்மோஸ் ஃபிளாஸ்க் ஒன்றினால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே தேஜேஷ்வர் உயிரிழந்துள்ளார். உடனே தேஜேஷ்வரின் உடலை அப்புறப்படுத்த நண்பர் ஒருவரை அழைத்துள்ளார். அவருக்கு 10,000 ரூபாய் தருவதாகவும் கூறியுள்ளார் தர்மேந்திர சிங்.
ஆனால் அவரது நண்பரோ பொலிஸுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், தர்மேந்திர சிங்கை கைது செய்து தேஜேஷ்வரின் உடலைக் கைப்பற்றினர். மேலும் இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |