காதலியின் கைக்குழந்தையை கொதிக்கும் நீரில் மூழ்கடித்து கொன்ற நபர்! திருமணத்திற்கு மறுத்ததால் வெறிச்செயல்
இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் காதலியின் கைக்குழந்தையை கொதிக்கும் நீரில் முக்கி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலியின் மகன் கொலை
மகாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த நபர், காதலியின் கைக்குழந்தையை கொதிக்கும் நீரில் முக்கியதில், குழந்தைக்கு கடுமையான தீ காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தை 15 தினங்களுக்கு பின்பு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
@inshorts
தனது குழந்தையை கொதிக்கும் நீரில் முக்கி கொன்றதாக பெண் ஒருவர் விக்ரம் ஷரத் கோலேகர் என்பவர் மீது புகார் அளித்துள்ளார். மேலும் பொலிஸார் நடத்திய விசாரணையில் அந்த பெண்ணும், விக்ரமும் காதலித்து வந்ததாக தெரிய வந்துள்ளது.
கொதிக்கும் நீரில் மூழ்கடித்த காதலன்
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 6ஆம் திகதி, விக்ரம் தனது காதலி இல்லாத சமயம் பார்த்து அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த காதலியின் குழந்தையை வாளியில் ஊற்றி வைக்கப்பட்டிருந்த கொதிக்கும் நீரில் மூழ்கடித்துள்ளார்.
@punecity police
தனது கணவனை பிரிந்து வாழும் பெண்ணும், விக்ரமும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் விக்ரம் அந்த பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண் சம்மதிக்கவில்லை.
மேலும் அந்த பெண்ணையும், அவரது சகோதரியையும் அடித்து சித்திரவதை செய்ததாக விக்ரம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொலிஸார் குற்றவாளியான விக்ரமை கைது செய்துள்ளனர்.
@filephoto
இந்நிலையில் புனே காவல்துறை கொலைக்கான சரியான காரணத்தை பற்றி அறிய தீவிர விசாரணை செய்து வருவதாக தெரிவித்துள்ளது.