பெற்ற தாய் என்றும் பாராமல் கத்தியால் குத்திக் கொன்ற இளைஞர்! நடுரோட்டில் அதிர்ச்சி சம்பவம்
இந்திய மாநிலம் கேரளாவில் இளைஞர் ஒருவர் பெற்ற தாயை சாலையில் வைத்து கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
காப்பகத்தில் சேர்க்கப்பட்ட பெண்
கேரளாவின் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை தலவூரை சேர்ந்தவர் மினிமோள் (50). இவர் 2007ஆம் ஆண்டில் முதியோர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குடும்பத்தினர் யாரும் கண்டுகொள்ளாததால் அவர் அங்கேயே வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் மினிமோளின் மகன் ஜோமோன் (25) நேற்றைய தினம் காப்பகத்திற்கு வந்துள்ளார்.
தனது தாயை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறி மினிமோளை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார்.
தாயை குத்திக் கொன்ற மகன்
கொட்டாரக்கரை-புனலூர் சாலையில் வாகனத்தை நிறுத்திய ஜோமோன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பெற்ற தாய் என்றும் பாராமல் மினிமோளை சரமாரியாக குத்தியுள்ளார்.
அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மினிமோளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மேலும் ஜோமோனை மடக்கி பிடித்து பொலிசாரிடம் பொதுமக்களே ஒப்படைத்துள்ளனர். இதற்கிடையில் மினிமோள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜோமோன் மீது வழக்குப்பதிவு செய்த பொலிஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |