காதல் மனைவியை கொன்றுவிட்டு கணவரும் இறப்பு! காதலர் தினத்தில் அரங்கேறிய சம்பவம்
தமிழக மாவட்டம் திருப்பூரில் தையல் தொழிலாளி ஒருவர், தனது மனைவியை கொலை செய்துவிட்டு தானும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காதல் தம்பதி
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தையல் தொழிலாளி செல்வம் (26). இவரும் திருவண்ணாமலையைச் சேர்ந்த தீபா (23) என்பவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
இந்த தம்பதிக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில், திருப்பூரைச் சேர்ந்த அங்கேரி பாளையத்தை அடுத்த வெங்கமேடு வேலன் நகரில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் இருவருக்கும் இடையே கடந்த 14ஆம் திகதி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த செல்வம், தனது மனைவியை மோசமாக தாக்கி, சுவருடன் சேர்த்து தள்ளியதாக கூறப்படுகிறது.
இதில் மூச்சு பேச்சின்றி தீபா மயக்கமடைந்துள்ளார். இதனால் அவர் இறந்து விட்டதாக நினைத்த செல்வம் தூக்குப்போட்டு உயிரிழந்தார்.
காதலர் தினத்தில் அதிர்ச்சி சம்பவம்
அந்த சமயம் குழந்தையை வீட்டிற்கு வெளியே விட்டுவிட்டு உள்பக்கமாக பூட்டியுள்ளனர். குழந்தையின் அழுகுரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து சன்னல் வழியாக பார்த்தபோது, செல்வம் தூக்கில் தொங்கியிருப்பதையும், அவரது மனைவி கீழே படுத்த நிலையிலும் இருந்துள்ளதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், உயிருக்குப் போராடிய தீபாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். செல்வத்தின் உடலையும் கைப்பற்றிய பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலர் தினத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |