அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்ட உடல் பாகங்கள்: மனைவியை துண்டு துண்டாக வெட்டி உடலை எரித்த நபர்
இந்திய மாநிலம் ஹரியானாவில் மனைவியை துண்டு துண்டாக வெட்டி, உடல் பாகங்களை தீயிட்டு எரித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எரிக்கப்பட்ட உடல்
ஹரியானாவின் மணிசார் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி பாதி எரிந்த பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த உடலில் பெண்ணின் தலை மற்றும் கைகள் இல்லாமல் இருந்திருக்கிறது.
@gettyimages
இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி வெட்டப்பட்ட கை பாகங்கள் கிடைத்துள்ளது. அடுத்ததாக மூன்று நாட்கள் கழித்து பெண்ணின் தலை கிடைத்துள்ளது.
@gettyimages
பிரேத பரிசோதனையில் அந்த உடல், கெர்க்கி டவுலா என்ற பகுதியை சேர்ந்த பெண்ணின் உடலென தெரிய வருகிறது. மேலும் அவர் 30 வயது மதிக்கதக்க பெண் எனவும் தெரிய வந்துள்ளது, தற்போது வரை பெண் கொலைக்கான காரணம் சரி வர தெரியவில்லை.
மனைவியை கொன்ற நபர்
பொலிஸாருக்கு வந்த தகவலின் படி குக்டோலா கிராமத்தை சேர்ந்த உமீத் சிங் என்ற நபர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை செய்ய சென்றுள்ளார்.
அப்போது ஏதோ புகை வருவதாக அவரது பக்கத்து தோட்டக்காரர் சொன்னதை கேட்டு சம்பவ இடத்திற்கு சென்று பார்த்துள்ளார்.
@gettyimages
அங்கு பாதி எரிந்த நிலையில் உடல் இருந்திருக்கிறது. உடனே அவர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். இந்தநிலையில் இறந்த பெண்ணின் கணவரை அழைத்து வந்து பொலிஸார் விசாரணை செய்கையில் குற்றவாளி அவர் தான் கண்டறிந்துள்ளார்.
மேலும் கொலைக்கான காரணத்தை தற்போது வரை தெரிவிக்கவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.