ஒரு பாடலுக்கு ரூ 25 லட்சம் ஊதியம் வாங்கும் பாடகி... கணவர் சர்வதேச நிறுவனம் ஒன்றின் தலைவர்
இந்தி திரையுலகில் உச்சத்தில் இருக்கும் பாடகிகளில் ஒருவர் ஸ்ரேயா கோஷல். இவரது கணவர் சர்வதேச நிறுவனம் ஒன்றில் முதன்மையான பொறுப்பில் இருக்கிறார்.
கடின உழைப்பும் திறமையும்
1984ல் பிறந்த ஸ்ரேயா கோஷல், கடந்த 2002ல் சஞ்சய் லீலா பன்சாலியின் தேவதாஸ் படத்தில் பாடகியாக அறிமுகமானார்.
இதுவரை 3000 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கும் இவர் இந்தி, பெங்காலி, அஸ்ஸாமி, போஜ்புரி, தெலுங்கு, தமிழ், ஒடியா, குஜராத்தி, கன்னடம், மராத்தி, மலையாளம், நேபாளி உட்பட பல்வேறு மொழிகளில் பாடல் பாடியுள்ளார்.
இவர் நான்கு முறை தேசிய விருதும், பல்வேறு மாகாண விருதுகளும் பெற்றுள்ளார். ஸ்ரேயாவின் கடின உழைப்பும் திறமையும் அவரை இந்தி திரையுலகில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் பாடகியாக உயர்த்தியுள்ளது.
வெளியான தகவலின் அடிப்படையில், ஒரு பாடலுக்கு ரூ 25 லட்சம் கட்டணமாக வசூலிக்கிறார் என்றே கூறப்படுகிறது. ஸ்ரேயா தனது பால்ய நண்பரான ஷிலாதித்யா முகோபாத்யாயாவை கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் காதலித்து 2015ல் திருமணம் செய்து கொண்டார்.
ஒரு நண்பரின் திருமணத்தின் போது தான் ஷிலாதித்யா முதல் முறையாக தனது காதலை வெளிப்படுத்தியதாகவும், அந்த தருணம் வாழ்க்கையில் மறக்க முடியாத பொக்கிஷம் என்றும் ஸ்ரேயா குறிப்பிட்டுள்ளார்.
குளோபல் தலைமை
ஸ்ரேயா கோஷல் திரையிசைத் துறையில் கோலோச்ச, ஷிலாதித்யா தொழில் உலகில் அறியப்படும் நபராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். பிரபலமான Truecaller நிறுவனத்தின் குளோபல் தலைமைப் பொறுப்பில் ஷிலாதித்யா பணியாற்றி வருகிறார்.
அத்துடன் Hipcask மற்றும் Pointshelf என இரண்டு நிறுவனங்களையும் அவர் நடத்தி வருகிறார். இன்றைய நாளில் ஸ்ரேயாவின் சொத்து மதிப்பு சுமார் 240 கோடி ரூபாயாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.
ஷிலாதித்யாவின் சொத்து மதிப்பு ரூ 1400 கோடிக்கும் அதிகமிருக்கலாம் என்றே நம்பப்படுகிறது. ஸ்ரேயா - ஷிலாதித்யா தம்பதிக்கு தேவ்யான் என்ற ஒரு மகன் இருக்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |