அமெரிக்க வேலையை விட்டுவிட்டு... இந்தியாவில் ரூ.125,000 நிறுவனத்தை நடத்தும் நபர்: அவரது சொத்து மதிப்பு
இந்தியாவில் பரவலாக அறியப்படும் Fevicol தயாரிப்பு நிறுவனமான Pidilite-ன் தலைவராக செயல்பட்டு வருபவர் மதுகர் பரேக்.
சந்தை மதிப்பு ரூ.125,000 கோடி
அமெரிக்காவில் Abbot Laboratories என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ள மதுகர் பரேக் 1972ல் Pidilite நிறுவனத்தில் இணைந்துள்ளார். மதுகர் பரேக்கின் தந்தையால் 1959ல் நிறுவப்பட்ட நிறுவனம் தான் இந்த Pidilite.
இந்த நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு என்பது ரூ.125,000 கோடி என்றே கூறப்படுகிறது. அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர் தற்போது 76 வயதாகும் மதுகர் பரேக்.
சர்வதேச சந்தைகளில்
இதன் பின்னரே, தமது தந்தை உருவாக்கிய நிறுவனத்தில் இணைந்துள்ளார். ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், மதுகர் பரேக்கின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.24,150 கோடி என்றே கூறப்படுகிறது.
மதுகர் பரேக்கின் வழிகாட்டுதலில் Pidilite நிறுவனம் சர்வதேச சந்தைகளில் நுழையும் பொருட்டு பல நிறுவனங்களை வாங்கியது.
Pidilite நிறுவனத்தின் முதன்மை தயாரிப்புகள் Fevicol, Fevikwik, Dr Fixit மற்றும் M-seal ஆகியவையாகும். Pidilite நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தியா மட்டுமின்றி, தற்போது வெளிநாடுகளிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |