தாயாரிடம் கடனாக வாங்கிய 100 ரூபாய்... இன்று ரூ 200 கோடிக்கு அதிபதி: அவரது தொழில்
மேற்கு வங்கத்தின் ஒரு குட்டி கிராமத்தில் இருந்து தாயாரிடம் கடனாக வாங்கிய 100 ரூபாய் பணத்துடன் டெல்லிக்கு புறப்பட்டவர், இன்று ரூ 200 கோடி சொத்துக்களுக்கு அதிபதியாக உயர்ந்துள்ளார்.
பெரும் நெருக்கடியை சந்தித்தது
மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் Malay Debnath. அரசியல் மோதலால் இவர்களது வணிக ஸ்தாபனம் தீக்கிரையானதால் தேப்நாத்தின் குடும்பம் பெரும் நெருக்கடியை சந்தித்தது.
தேப்நாத்துக்கு அப்போது வெறும் 6 வயது தான். அதன் பின்னர் அவர்களால் அந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வர முடியாமல் போனது. 1980 காலகட்டத்தில் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்தது.
தேப்நாத், அவரது மூத்த சகோதரி மற்றும் அவரது இரண்டு இளைய சகோதரர்கள் ஆகியோர் இன்னும் பள்ளிப்படிப்பையே முடிக்கவில்லை. மேலும் அவர்களின் குடும்பம் பாதகமான சூழ்நிலைகளை எதிர்கொண்டது தந்தை வேலை தேடும் முயற்சிகளில் தீவிரமாக இருந்தார்.
இருப்பினும் சின்னதாக தேயிலை விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளது தேப்நாத் குடும்பம். பாடசாலை வேளைக்கு பின்னர் தேப்நாத் அதை முன்னெடுத்து வந்தார். பள்ளிப்படிப்பை முடிக்கும் வரையில் தேப்நாத் தேயிலை விற்பனை தொழிலை செய்து வந்தார்.
அனுபவம் கைகொடுத்தது
கல்லூரி படிப்புக்கு வசதி இல்லை என்பதால், அடுத்ததாக தாயாரிடம் இருந்து ரூ 100 கடனாக வாங்கி டெல்லிக்கு புறப்பட்டார் தேப்நாத். ஹொட்டல் ஒன்றில் பாத்திரம் கழுவும் பணிக்கு சேர்ந்த அவர் தமது கடின உழைப்பார் ஓராண்டில் 500ல் இருந்து ரூ 3000 சம்பளமாக பெற்றார்.
ஆனால் அதன் பின்னர் ஹொட்டல் வேலையை விட்டுவிட்டு நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கும் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். அத்துடன் ஹொட்டல் தொழிலுக்கான பட்டம் ஒன்றிலும் தேர்ச்சி பெற்றார்.
தொடர்ந்து கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நிறுவனம் ஒன்றை புதிதாக தொடங்கிய தேப்நாதுக்கு, அதுவரை தாம் பெற்ற அனுபவம் கைகொடுத்தது.
தற்போது இந்திய ராணுவத்தில் டெல்லி, புனே, ஜெய்ப்பூர், அஜ்மீர் மற்றும் குவாலியர் உள்ளிட்ட 35 உணவு விடுதிகளை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். கடும் உழைப்பாளியான தேப்நாத் தற்போது ஒரு தேயிலைத் தோட்டம் உட்பட ரூ 200 கோடி சொத்துக்களுக்கு அதிபதியாக உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |