அஹமதாபாத் விமான விபத்தில் பெற்றோரை இழந்த பிரித்தானியர்: பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம்
British citizen who lost parents in Ahmedabad plane crash, writes open letter to UK PM: அஹமதாபாத் விமான விபத்தில் பெற்றோரை இழந்த பிரித்தானியர் ஒருவர், பிரித்தானிய பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் திகதி, இந்தியாவின் அஹமதாபாதிலிருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று, புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளாகியது.

அந்த விபத்தில் ஒரே ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார், மற்ற அனைவரும் உயிரிழந்துவிட்டனர். உயிரிழந்தவர்களில் 53 பிரித்தானிய குடிமக்களும் அடங்குவர்.
பெற்றோரை இழந்த பிரித்தானியர்
அந்த விபத்தில் உயிரிழந்தவர்களில், பிரித்தானிய குடிமகனான மித்தேன் பட்டேலின் பெற்றோரான அஷோக்பாயும் ஷோபனா பென்னும் அடங்குவர்.

இந்நிலையில், பிரித்தானிய பிரதமரான ஆன்டி பர்னாமுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் பட்டேல்.
விடயம் என்னவென்றால், உயிரிழந்த ஷோபனா பென்னின் உடல் பிரித்தானியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அவரது உடல் அனுப்பப்பட்ட பெட்டியில், அந்த உடலின் சில பாகங்கள் இல்லை.
அதைவிடக் கொடுமை என்னவென்றால், அந்த பெட்டியில் வேறு யாரோ ஒருவருடைய உடல் பாகங்களும் இருந்துள்ளன.
ஆக, தன் தாயின் உடலின் மீதமுள்ள பாகங்கள் எங்கே என்றும், அந்த இன்னொரு நபரின் உடல் பாகங்கள் தன் தாயின் உடலுடன் அனுப்பப்பட்டிருக்க, அந்த நபரின் உறவினர்கள், தங்கள் அன்பிற்குரியவரின் உடல் பாகங்கள் இல்லாமலேதானே அவருக்கு இறுதிச்சடங்கு செய்திருப்பார்கள் என கேள்வி எழுப்புகிறார் பட்டேல்.
மேலும், விபத்துக்கான காரணம் குறித்த இறுதி அறிக்கையும் இதுவரை வெளியாகவில்லை.
அத்துடன், விபத்து நடந்த இடத்தில், புதிதாக ஒரு ஹாஸ்டல் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பட்டேல், அந்த இடத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நினைவிடம் கூட எழுப்பப்படவில்லை என்கிறார்.
ஆக, அந்த விமான விபத்து தொடர்பான விசாரணையில் பிரித்தானிய அதிகாரிகளும் இடம்பெறவேண்டும் என்பது முதலான சில கோரிக்கைகளை முன்வைத்து, பிரித்தானிய பிரதமரான ஆன்டி பர்னாமுக்கு பட்டேலும், அவரைப்போல அந்த விமான விபத்தில் தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்த மற்றவர்களும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.