ஆசை வார்த்தை பேசி பிரித்தானியா பெண்ணிடம் பல கோடிகளை சுருட்டிய இளைஞர்! அடுத்து நடந்தது என்ன?
இங்கிலாந்தில் இளைஞர் ஒருவர் முகநூல் மூலம் பெண்ணிடம் ஆசையாக பேசி சுமார் 87000 பவுண்ட்ஸ் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் Manchester பகுதியில் வசித்து வருபவர் Sharon Bulmer. கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கடந்த சில நாட்களாக கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் Sharon Bulmer-க்கு facebook மூலம் ஒரு ஆண் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்த நபரும் தான் ஒரு அமெரிக்க ராணுவ வீரர் என்று அறிமுகம் செய்துள்ளார். அவரின் முகநூல் பக்கத்தில் லத்வியா நாட்டின் அமைச்சர் மெர்ஃபியின் புகைப்படம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அந்த நபர் காதல் வலை வீசி நாளடைவில் நெருக்கமாக பேச தொடங்கியுள்ளனர். ஒரு நாள் Sharon-யிடம் சிரியாவில் இருந்து வெளியே வர செலவிற்கு பணம் கேட்டுள்ளார்.
இதையடுத்து அந்த பெண்ணும் சுமார் 87,000 ஆயிரம் பவுண்ட்ஸ் அனுப்பியுள்ளார். அதன் பிறகு அந்த நபரிடம் இருந்து எந்த அழைப்பும் வராததையடுத்து நாம் ஏமாந்துவிட்டோம் அந்த பெண் உணர்ந்துள்ளார்.
பின்னர் அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் பொலிஸார் நடத்திய விசரணையில் பல உண்மைகள் தெரியவந்துள்ளது.
அதாவது முகநூலில் லத்வியா நாட்டின் அமைச்சர் படத்தை பயன்படுத்தி 100க்கும் மேற்பட்ட போலி கணக்குள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதன்மூலம் பலர் பணம் பறிகொடுத்துள்ளது தெரியவந்துள்ளது பலரிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்து மோசடி செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.