கனேடிய குடிவரவு முகவர் பணம் கேட்பதாக அழுத நபர்! அதை நம்பி லட்சங்களை இழந்த இளைஞன்
கனடாவில் இருந்து தனது உறவினர் பணம் கேட்டதாக நினைத்த நபர் பெரிய இழப்பை சந்தித்துள்ளார்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் வசிக்கும் தர்சீம் லால் என்பவர் தான் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மேல் ஏமாந்துள்ளார். இது தொடர்பில் பொலிசில் புகார் அளித்தபின்னர் அவர் கூறுகையில், எனக்கு சமீபத்தில் சர்வதேச எண்ணில் இருந்து போன் வந்தது.
அதில் பேசிய நபர் என்னுடைய உறவினர் என கூறினார். இதையடுத்து ஆர்வத்தில் நான் கனடாவில் வசிக்கும் என் மாமா மகனான விகாஷ் தானே நீங்கள் என கேட்க அவரும் ஆம் என்றார்.
பின்னர் அவர் என்னிடம், குடிவரவு முகவரின் கட்டணத்தைச் செலுத்த பணம் தேவைப்படுவதாகக் கூறினார், அதை கொடுக்க தவறினால் முகவர் கனேடிய பொலிஸில் புகார் செய்வதாக மிரட்டுவதாக அழுது கொண்டே சோகத்துடன் சொன்னார்.
Canadian Press/Nathan Denette/Tribuneindia
இதையடுத்து நமது உறவினர் விகாஷ் தானே என நம்பி நானும் ரூ. ஒன்றரை லட்சத்தை அவர் கொடுத்த வங்கி கணக்குக்கு அனுப்பினேன். சில நாட்களுக்கு பிறகு விகாஷ் குடும்பத்தாரிடம் இது குறித்து விசாரித்த போது, விகாஷ் ஒருபோதும் பணம் கேட்டு எனக்கு போன் செய்யவில்லை என அவர்கள் சொன்னார்கள்.
பிறகு தான் நான் ஏமாற்றப்பட்டது தெரிந்தது என கூறினார்.
இதனிடையில் பொலிசார் குறித்த வங்கிக்கணக்கை வைத்து தங்களை விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இது தொடர்பில் இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு போடப்பட்டுள்ளது.