குப்பையை கிளறியதால் கோடிகளில் தொடர்ந்து கொட்டும் பணம்! ஆச்சரியப்படுத்தும் தனி ஒருவன்
குப்பையை கிளிறினால் பெரும் கோடீஸ்வரர் ஆக முடியுமா? முடியும் என நிரூபித்துள்ளார் தேஷ்வல் வேஸ்ட் மேனேஜமன்ட் நிறுவனத்தின் நிறுவனர் ராஜ்குமார் (38)..!
ஆம்! பிளாஸ்டிக், மின்னணு கழிவுகள் போன்றவற்றை மறுசுழற்சி செய்வது தான் இந்த நிறுவனத்தின் பணி. இந்த குப்பைகளை பயன்படுத்திக்கொண்டு வருவாய் ஈட்டும் தொழில்முனைவோராக ராஜ்குமார் மாறியுள்ளார்.
இந்திய அரசின் 2010 மின்னணு கழிவு வரைவால் ஊக்கம் பெற்ற ராஜ்குமார், 2013ல் தனது சொந்த நிதியை முதலீடு செய்து, தேஷ்வல் நிறுவனத்தை துவக்கினார்.
2018ல் இந்தியா ஆண்டுக்கு மூன்று மில்லியன் மெட்ரிக் டன் மின்னணு கழிவுகளை உருவாக்கியது. நம்முடைய தேசத்தின் மறுசுழற்சி திறன் இதில் ஐந்து சதவீதம் மட்டுமே - ராஜ்குமார்
அதே நேரத்தில், மானேசர் பகுதியில் பெரிய அளவிலான மறுசுழற்சி வசதியையும் அமைத்தார். இந்த இரண்டு ஆலைகளும், பாட்டரிகள், பிளாஸ்டிக், பயன்படுத்திய எண்ணெய் உள்ளிட்ட கழிவுகளை மறுசுழற்சி செய்தன.
ராஜஸ்தானின் குருஷேத்ராவில் முதல் மின்னணு கழிவு மறுசுழற்சி ஆலையை ஏற்படுத்துவதன் மூலம், சமூக நலன் மற்றும் சுற்றுச்சூழல் நலனுக்கு என் பங்கை ஆற்ற விரும்பினேன் - ராஜ்குமார்
தேஷ்வல் நிறுவனத்தில் ரூ.15 கோடி முதலீடு செய்து, 2018-19ல் ரூ.23 கோடி விற்றுமுதல் கண்டுள்ளார். துவக்கம் முதல் 1,000 மெட்ரிக் டன் கழிவை மறுசுழற்சி செய்த நிறுவனம், 2019 க்கு பிறகு ஆண்டுக்கு 500 டன் மற்சுழற்சி செய்ய திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.