சகோதரியின் தோழியை மணந்து பிரித்தானியாவில் வாழ்ந்த நபர்! திருமணமான 1 மாதத்தில் ஏற்பட்ட அதிர்ச்சி
பிரித்தானியாவில் திருமணமான ஒரு மாதத்தில் வீட்டில் இருந்து மாயமான பெண்.
விசாரணையில் தெரியவந்த உண்மை.
பெண்ணொருவரை திருமணம் செய்து பிரித்தானியாவுக்கு அழைத்து வந்த நபருக்கு திருமணமாகி ஒரு மாதத்தில் அதிர்ச்சி காத்திருந்தது.
நைஜீரியாவை சேர்ந்த பெண்ணொருவர் தனது தோழியை தன்னுடைய சகோதரருக்கு திருமணம் செய்து வைக்க நினைத்து அவரிடம் அறிமுகம் செய்து வைத்தார்.
அப்பெண்ணின் சகோதரர் பிரித்தானியாவில் இருந்த நிலையில் இருவருக்கும் திருமணம் நடந்தது. பிரித்தானியாவில் புதுமண தம்பதி வாழ்க்கையை தொடங்கிய ஒரு மாதத்தில் புதுமாப்பிள்ளைக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அவர் மனைவி வீட்டிலிருந்து மாயமானார்.
பின்னர் அவரை தேடிய போது தான் பழைய காதலனுடன் சென்றது தெரியவந்தது. தன்னிடம் எதற்காக அப்பெண்ணை அறிமுகம் செய்து வைத்தாய் என சகோதரியிடம் அவர் சண்டை போட்டிருக்கிறார்.
இது தொடர்பாக உள்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் புலம்பெயர்ந்த இருவரும் விசாரணைக்கு பின்னர் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.