28 மனைவிகள் , 126 பேர குழந்தைகள் முன்னிலையில் 37-வது திருமணம் செய்த கணவன்! எந்த நாடா இருக்கும்? வைரலாகும் வீடியோ
கணவர் ஒருவர் 28 மனைவிகள் முன்னிலையில் 37-வது திருமணம் செய்து கொண்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
உலகில் ஜிம்பாப்வே, கென்யா போன்ற நாடுகளில் ஒரு சில கணவர்களுக்கு ஐந்து முதல் பத்து மனைவிகள் எல்லாம் இருப்பதைக் கேள்விபட்டிருக்கிறோம். குறிப்பாக ஜிம்பாப்வேயில், Mischeck Nyandoro என்ற நபர் 16 திருமணம் செய்து கொண்ட நிலையில், அடுத்த 17-வது திருமணத்திற்கு தயாராகி வருவதாக கூறியிருந்தார்.
அந்த செய்தி பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த Rupin Sharma என்ற ஐபிஎஸ் அதிகாரி, கடந்த 6-ஆம் திகதி வீடியோ ஒன்றை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
BRAVEST MAN..... LIVING
— Rupin Sharma IPS (@rupin1992) June 6, 2021
37th marriage in front of 28 wives, 135 children and 126 grandchildren.👇👇 pic.twitter.com/DGyx4wBkHY
அதில், கணவர் ஒருவருக்கு 28 மனைவிகள், 135 குழந்தைகள், 126 பேரக் குழந்தைகள் இருக்க, அவருக்கு 37-வது திருமணம் என்று குறிப்பிட்டிருந்தார். அவர் சொல்லுவது போன்றே அவருக்கு இது 37-வது திருமணம் தான் என்று அங்கிருப்பவர்கள் கூறுவதை கேட்க முடிகிறது. ஆனால் இது இங்கு நடந்தது என்பது தெரியவில்லை,
ஆனால் இதைக் கண்ட இணையவாசிகள், இது எந்த நாட்டில் நடந்திருக்கு? கொஞ்சம் சொல்லுங்கப்பா,சரியான அதிர்ஷ்டசாலி என்று குறிப்பிட்டு வருகின்றனர்.