காதலர் வருவார் என பல ஆண்டுகள் காத்திருந்த காதலி... மகன் கண்டுபிடித்த உண்மை: சினிமா போல் நடந்த ஒரு சோக சம்பவம்
இங்கிலாந்தில் இராணுவ தளம் அமைத்திருந்த அமெரிக்க வீரர்களில் ஒருவர், ஒரு அழகிய இளம்பெண்ணை நடன விடுதி ஒன்றில் சந்தித்தார்.
இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் அமெரிக்காவுக்கு சென்ற காதலர், திரும்பி வருவார் என பல ஆண்டுகளாக காத்திருந்தார் Betty என்ற அந்த பெண். ஆனால், Wilbert Wiley என்ற அந்த காதலர் திரும்ப வரவேயில்லை.
சரி, அவர் இறந்திருப்பார் போலும், அதனால்தான் அவர் வரவில்லை என்று எண்ணி வேறொருவரை திருமணம் செய்துகொண்டார் Betty.
Leicesterஇல் வாழும் Bettyயின் மகனான Bill, தன் தந்தை உயிருடன் இருந்திருந்தால் தன்னைத் தேடி வந்திருப்பார் என தன் தாய் அவ்வளவு உறுதியாக நம்பிக்கொண்டிருந்ததால், தன் தந்தையைத் தேட முயற்சிக்கவேயில்லையாம்.
ஆகவே, Betty இறந்தபிறகு டி என் ஏ பரிசோதனை மூலம் தன் உறவினர்களை தேடியுள்ளார் Bill.
அப்போது, தன் தந்தையான Wilbertக்கு மனைவியும் ஒரு மகனும் இருப்பது அவருக்கு தெரியவந்துள்ளது.
அத்துடன், தன் தந்தை ஏன் திரும்பி வரவில்லை என்பதற்கான காரணத்தை அறிந்து தன்னைத்தான் ஆறுதல் படுத்திக்கொண்டார் Bill.
ஆம், Wilbert ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர், Bettyயோ பிரித்தானியர். அந்த காலகட்டத்தில் கலப்பினத் திருமணங்கள் செய்வது அமெரிக்காவில் சட்ட விரோதம்.
ஆகவே, அவர் விரும்பினாலும், அவரால் பிரித்தானியா வந்து Bettyயை திருமணம் செய்திருக்கமுடியாது. அவரது மூத்த அதிகாரிகள் அவரை பிரித்தானியா செல்ல அனுமதித்திருக்கவும்மாட்டார்கள்... டி என் ஏ சோதனைகள் மூலம் தன் உறவினர்களை தேடிய Billக்கு இப்போது 75 வயது. இப்போதுதான் அவர் தன் தந்தை வழி உறவினர்களைக் கண்டுபிடித்திருக்கிறார்.
தன் தந்தையும் தனது ஒன்றுவிட்ட சகோதரனும், அதாவது Wilbertஇன் மகனும் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், தன் தந்தையின் சகோதரரின் இரண்டு மகள்கள் அமெரிக்காவில் இருப்பதை அறிந்துகொண்ட Bill, அவர்களை காணொலிக்காட்சி மூலம் சந்தித்துள்ளார்.
எனக்கு 75 வயதாகிறது, எனக்கு யாராவது உறவினர்கள் இருக்கமாட்டார்களா என இத்தனை ஆண்டுகளும் ஏங்கிக்கொண்டிருந்தேன் என உனர்ச்சிவசப்பட்ட நிலையில் Bill கூற, உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்கிறார்கள் அவரது ஒன்றுவிட்ட சகோதரிகளான Phillisம் Reginaவும்.
அவர்கள், Bill தங்கள் தந்தையைப் போலவே இருப்பதாகக் கூற, புளகாங்கிதம் அடைகிறார் அவர்.
கொரோனா முடிந்ததும் லண்டனுக்கு சென்று தங்கள் சகோதரனை சந்திக்க விரும்புவதாக சகோதரிகள் கூற அனைவர் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்!


