திருமணம் செய்துகொள்ள மறுத்த இளம்பெண்: காதலர் செய்த பயங்கர செயல்

Uttar Pradesh
By Balamanuvelan Jan 28, 2026 10:41 AM GMT
Report

 இந்தியாவின் ஆக்ராவில் மனிதவள மேலாளராக பணியாற்றிவந்த இளம்பெண்ணொருவர் அலுவலகம் சென்ற நிலையில் மாயமானார்.

பொலிசாரின் தேடுதல் வேட்டையில் அதிரவைக்கும் உண்மைகள் தெரியவந்துள்ளன!

மாயமான இளம்பெண்

ஆக்ராவிலுள்ள அலுவலகம் ஒன்றில் மனிதவள மேலாளராக பணியாற்றிவந்த மிங்கி ஷர்மா (32) என்னும் இளம்பெண், கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, ஜனவரி மாதம் 23ஆம் திகதி அலுவலகம் சென்ற நிலையில் மாயமானார். 

திருமணம் செய்துகொள்ள மறுத்த இளம்பெண்: காதலர் செய்த பயங்கர செயல் | Man Murder Hr Manager In Agra Refuse Marriage

மகளைக் காணாத பெற்றோர் பொலிசில் புகாரளிக்க, மறுநாள், அதாவது 24ஆம் திகதி யமுனா நதியின் மீது அமைந்துள்ள ஜவஹர் பாலத்தின்மீது சந்தேகத்துக்குரிய வகையில் பை ஒன்று கிடப்பதைக் கண்ட மக்கள் பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.

பொலிசார் அந்தப் பையை பரிசோதிக்கும்போது, அதற்குள் ஆடையில்லாத ஒரு பெண்ணின் உடல் மட்டும் இருந்துள்ளது, அதன் தலையைக் காணவில்லை.

இரண்டு வழக்குகளையும் இணைத்து பொலிசார் CCTV கமெராக்களை ஆராயும்போது, மிங்கியின் அலுவலகத்திலிருந்து ஒருவர், ஒரு பெரிய பையை இழுத்துக்கொண்டு வந்து ஒரு ஸ்கூட்டரில் ஏற்றிச் செல்வது தெரியவந்தது. 

தமிழ் நடிகைகள் முதல் முதல்வர்கள் வரை - விமான விபத்தில் உயிரிழந்த இந்திய பிரபலங்கள்

தமிழ் நடிகைகள் முதல் முதல்வர்கள் வரை - விமான விபத்தில் உயிரிழந்த இந்திய பிரபலங்கள்

அடுத்தடுத்த கமெராக்களை ஆராய்ந்ததில், அந்த நபர், மிங்கி வேலை செய்யும் அதே அலுவலகத்தில் வேலை செய்யும் வினய் சிங் (30) என்பவர் என்பது தெரியவரவே, பொலிசார் அவரைக் கைது செய்துள்ளார்கள்.

விசாரணையில், தானும் மிங்கியும் இரண்டு ஆண்டுகளாக காதலித்துவந்ததாகவும், ஆனால், ஆறு மாதங்களுக்கு முன் மிங்கி வேறொரு ஆணுடன் பழகத் துவங்கியது தெரியவந்ததாகவும் கூறியுள்ளார் வினய். 

திருமணம் செய்துகொள்ள மறுத்த இளம்பெண்: காதலர் செய்த பயங்கர செயல் | Man Murder Hr Manager In Agra Refuse Marriage

மிங்கியை அலுவலகத்து வரவழைத்த வினய், தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்த, மிங்கி மறுத்துள்ளார். வாக்குவாதம் முற்றவே, மிங்கியைக் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார் வினய்.

பின்னர் அவரது தலையை தனியாக வெட்டி ஒரு பையிலும், உடலை மற்றொரு பையிலும் போட்டு, யமுனா நதியில் வீசிவிட திட்டமிட்டுள்ளார் வினய்.

ஆனால், ஜவஹர் பாலத்திற்குச் சென்றபோது அங்கு ஆள் நடமாட்டம் இருந்துகொண்டே இருந்ததாலும், உடல் இருந்த பையைத் தூக்கமுடியாததாலும், பாலத்தின் அருகிலேயே அந்த பையை வைத்துவிட்டு, மிங்கியின் தலை இருந்த பையை வேறொரு இடத்தில் கொண்டு போட்டுள்ளார் வினய்.

அவர் கொடுத்த தகவலின்பேரில் மிங்கியின் தலையும், அவரது மொபைல் மற்றும் ஸ்கூட்டரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள வினயிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


நன்றி நவிலல்
நன்றி நவிலல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
நன்றி நவிலல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US