பல கோடியை குப்பையில் தூக்கி வீச சென்ற நபர்! பெரும் தவறை செய்ய நினைத்தவரை இறுதியில் கைவிடாத அதிர்ஷ்டம்
அமெரிக்காவில் பெரிய பரிசு விழுந்த லொட்டரி சீட்டை குப்பையில் தூக்கி போட நபர் ஒருவர் முடிவு செய்த நிலையில் இறுதியில் அவருக்கு அந்த அதிர்ஷ்டம் கைக்கு வந்து சேர்ந்துள்ளது.
கிட்டத்தட்ட பெரும் தவறை செய்யவிருந்த நிலையில் இறுதி நேரத்தில் $277,086 பரிசை தட்டி சென்றிருக்கிறார் ஜான் கோர்ன்வெல் என்ற நபர்.
முதலில் தனக்கு தான் எப்போதும் அதிர்ஷ்டம் அடிக்காதே என நினைத்து லொட்டரி டிக்கெட்டை குப்பையில் போட சென்றிருக்கிறார் ஜான்.
ஆனால் எதற்கும் ஒரு தடவை பார்த்துவிடுவோம் என லொட்டரி அலுவலகத்தை தொடர்ந்து கொண்டு அது குறித்து கேட்டுள்ளார். இதையடுத்து பரிசு விழுந்தது அவருக்கு தெரிந்துள்ளது.
அப்போது தான் லொட்டரி டிக்கெட்டை கிழிந்து குப்பையில் போட்டிருந்தால் வாழ்வின் மிகப்பெரிய தவறை செய்திருப்போமே என உணர்ந்துள்ளார் ஜான்.
பரிசு பணத்தை வைத்து புது காரை முதலில் வாங்கி மனைவிக்கு பரிசாக கொடுக்கவுள்ளார் ஜான்.