சொந்தமாக கால்பந்து அணி, தங்கம் இழைத்த ஹொட்டல், ரூ 5000 கோடியில் சொகுசு படகு... யாரிந்த நபர்
பிரித்தானியாவின் மிகவும் பிரபலமான மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணியின் உரிமையாளரான ஷேக் மன்சூர் என்பவரே அந்த நபர்.
அபுதாபி யுனைடெட் குழுமத்தின்
மான்செஸ்டர் சிட்டி அணியின் தொடர் வெற்றிக்கு நிகரானது அதன் உரிமையாளரான ஷேக் மன்சூரின் சாதனைகளும். ஐக்கிய அரபு அமீரகத்தை ஆளும் குடும்பத்தின் உறுப்பினர்களில் ஒருவர் ஷேக் மன்சூர் பின் சயீத் அல் நஹ்யான்.
இவரது மொத்த சொத்து மதிப்பு என்பது சுமார் 24,866 கோடி அல்லது 30 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது. அபுதாபி யுனைடெட் குழுமத்தின் உரிமையாளரான இவர் கடந்த 2008 செப்டம்பர் மாதம் மான்செஸ்டர் சிட்டி அணியை தமது முதலீட்டு நிறுவனம் சார்பில் கைப்பற்றினார்.
2016ல் தோராயமாக ரூ 433 கோடி செலவிட்டு 20,000 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட ஸ்பானிய எஸ்டேட் ஒன்றை வாங்கினார். அபுதாபியில் உள்ள சொகுசு ஹொட்டல் உட்பட இவரது குடும்பத்தினரின் மொத்த சொத்து மதிப்பு என்பது 560 பில்லியன் பவுண்டுகள் அல்லது சுமார் ரூ 5,78,198 கோடி என்றே கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட 50 நிறுவனங்களில்
இந்த ஹொட்டலின் 22 அறைகளில் தங்கத்தால் இழைக்கப்பட்டுள்ளது என்பதுடன் மொத்தம் 394 அறைகள் உள்ளன. 2022ல் 525 அடி நீளம் கொண்ட மிகப்பெரிய படகு ஒன்றையும் ஷேக் மன்சூர் வாங்கியுள்ளார்.
இதன் மதிப்பு ரூ 5163 கோடி என்றே கூறப்படுகிறது. 2014ல் இவருக்கு சொந்தமான சொகுசு படகு ஒன்றை பிரபல நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ தனது தனிப்பட்ட கொண்டாட்டங்களுக்காக பயன்படுத்திக்கொண்டுள்ளார்.
உலகம் முழுக்க கிட்டத்தட்ட 50 நிறுவனங்களில் ஷேக் மன்சூர் முதலீடு செய்துள்ளார். மட்டுமின்றி, பல்வேறு கால்பந்து அணிகளிலும் ஷேக் மன்சூர் முதலீடு செய்துள்ளார் என்றே கூறப்படுகிறது.
அத்துடன் பல எண்ணிக்கையிலான சொகுசு கார்களின் வரிசையும் இவரிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |