இதுவரை சாம்பியன்ஸ் டிராஃபியில் அதிகமுறை ஆட்டநாயகன் விருது பெற்றவர்கள்: முதலிடத்தில் யார் தெரியுமா?
சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் இதுவரை அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்றவர்கள் குறித்த பட்டியலை காண்போம்.
சிக்ஸர் மன்னன் முதலிடம்
வருகிற 19ஆம் திகதி பாகிஸ்தானின் கராச்சியில் தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளன. இதுவரை நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராஃபி தொடர்களில் ஆட்டநாயகன் விருதினை வென்றவர்களில் இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியா தரப்பில் 2 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
சிக்ஸர் மன்னன் கிறிஸ் கெய்ல், அதிகமுறை சாம்பியன்ஸ் டிராஃபி தொடர்களில் ஆட்டநாயகன் விருதினை பெற்று முதலிடத்தில் உள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக, ஜேக் கல்லில் மற்றும் ஸ்டெபென் பிளம்மிங் ஆகியோர் உள்ளனர்.
டேமியன் மார்ட்டின், கிளென் மெக்ராத், விரேந்தர் சேவாக் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
ஆட்டநாயகன் விருது பட்டியல்:
1.கிறிஸ் கெய்ல் (மேற்கிந்திய தீவுகள்) - 5 முறை (14 போட்டிகள்)
2.ஜேக் கல்லிஸ் (தென் ஆப்பிரிக்கா) - 3 முறை (14 போட்டிகள்)
3.ஸ்டெபன் பிளெம்மிங் (நியூசிலாந்து) - 3 முறை (13 போட்டிகள்)
4.ஷாஹித் அஃப்ரிடி (பாகிஸ்தான்) - 2 முறை (9 போட்டிகள்)
5.விரேந்தர் சேவாக் (இந்தியா) - 2 முறை (10 போட்டிகள்)
6.டேமியன் மார்ட்டின் (அவுஸ்திரேலியா) - 2 முறை (12 போட்டிகள்)
7.கிளென் மெக்ராத் (அவுஸ்திரேலியா) - 2 முறை (12 போட்டிகள்)
8.சவுரவ் கங்குலி (இந்தியா) - 2 முறை (13 போட்டிகள்)
9.ராம்நரேஷ் சர்வான் (மேற்கிந்திய தீவுகள்) - 2 முறை (14 போட்டிகள்)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |