வெளிநாட்டவர் தாக்கியதால் உயிரிழந்த ரயில் நடத்துனர்: வழக்கு விசாரணை துவக்கம்
ஜேர்மனியில், ரயில் நடத்துனர் ஒருவர், பயணி ஒருவரிடம் பயணச்சீட்டைக் காட்டுமாறு கேட்க, அந்த பயணி அவரைத் தாக்கியதில் அந்த நடத்துனர் உயிரிழந்துவிட்டார்.
அந்த வழக்கு விசாரணை நேற்று துவங்கியுள்ளது.
ரயில் நடத்துனரை தாக்கிய வெளிநாட்டவர்
பிப்ரவரி மாதம் 2ஆம் திகதி, Landstuhl நகருக்கருகில் ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்த நிலையில், ரயில் நடத்துனரான சேர்க்கான் கலார் (36), கிரீஸ் நாட்டவரான பயணி ஒருவரிடம் அவரது பயணச்சீட்டைக் காட்டுமாறு கேட்டுள்ளார்.

அந்த 26 வயது நபரிடம் பயணச்சீட்டு இல்லாததால், நடத்துனர் அவரது அடையாள அட்டையைக் கேட்க, அவர் அதற்கும் மறுப்பு தெரிவித்ததால், ரயிலிலிருந்து அவரை இறங்கச் சொல்லியுள்ளார் அந்த நடத்துனர்.
தன்னை ஒரு ‘பாக்ஸர்’ எனக்கூறி மிரட்டிய அந்த கிரீஸ் நாட்டவர், சேர்க்கானை முரட்டுத்தனமாக தாக்கியுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேர்க்கான், இரண்டு நாட்களுக்குப் பிறகு உயிரிழந்துவிட்டார். சேர்க்கானுக்கு இரண்டு பிள்ளைகளும் நான்கு தம்பிகளும் இருக்கிறார்கள்.
Zweibrücken நீதிமன்றத்தில் நேற்று இந்த வழக்கு விசாரணை நேற்று துவங்கியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |