சிறுவயதில் குடும்பத்தை காப்பற்ற பட்டாசு விற்றவர் - இன்று ரூ.21,987 கோடி சொத்துமதிப்பு
குடும்பத்தை காப்பற்ற பட்டாசு விற்ற நபர், இன்று ரூ.21,987 கோடி சொத்து மதிப்பு வைத்துள்ள தொழிலதிபராக உயர்ந்துள்ளார்.
குடும்பத்தை காப்பற்ற பட்டாசு விற்ற ரிஸ்வா
மும்பையின் காட்கோபரில் உள்ள ஒரு குடிசைப் பகுதியில் பிறந்தவர் ரிஸ்வான் சாஜன்(rizwan sajan). இவருடைய குடும்பத்தின் ஒரே நிதி ஆதாரமாக அவரின் தந்தை, எஃகு தொழிற்சாலையில் மாதம் ரூ.7,000 சம்பாதித்து வந்தார்.
ரிஸ்வானின் 16 வயதில் அவரது தந்தை இறந்ததால், அவரது 3 இளைய சகோதர்கள் மற்றும் தாய் அடங்கிய குடும்பத்தை காப்பற்ற ரிஸ்வான் வருமானம் ஈட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
படிக்கும் வயதிலேபள்ளிக்கு செல்லும் முன்னர் பால் விற்பது, அதன் பின்னர் புத்தகங்கள் விற்பது, பட்டாசுகள் விற்பது என கிடைத்த வேலைகளை செய்து குடும்பத்திற்காக வருமானம் ஈட்டி வந்தார்.
1981 ஆம் ஆண்டில் அவரது மாமாவின் உதவியுடன் குவைத்தில், ரூ.18,000 மாத சம்பளத்துடன் விற்பனைப் பயிற்சியாளர் வேலையில் சேர்ந்தார்.
1990 ஆம் ஆண்டில் வளைகுடா போர் ஏற்பட்டதையடுத்து, வேலையை விட்டு மீண்டும் மும்பை திரும்பினார்.
ரூ.21,987 கோடி சொத்துமதிப்பு
அதன் பின்னர், 1993 ஆம் ஆண்டில் கையில் இருந்த பணத்தை வைத்து, துபாயில் டானூப் குழுமம்(danube group0 என்ற கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை துவங்கினார். சிறு வயதிலே அவர் செய்த வேலை அனுபவங்கள் அவரை ஒரு தொழில்முனைவோராக மாற்றியது.
டானூப் குழுமம், ரியல் எஸ்டேட், வீட்டு அலங்காரம் என பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ளது. பஹ்ரைன், ஓமன், சவுதி அரேபியா என பல்வேறு நாடுகளில் டானூப் குழுமம் வணிகம் செய்து வருகிறது.
தற்போது துபாய் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அவரது நிறுவனம் ஆண்டுக்கு 5.13 பில்லியன் AED(இந்திய மதிப்பில் ரூ.12,292 கோடி) வருமானம் ஈட்டுவதாக தெரிவித்துள்ளது.
இவரின் சொத்துமதிப்பு என 2.5 பில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.21,987 கோடி) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலின் படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பணக்கார இந்தியர்களின் பட்டியலில் ரிஸ்வான் சாஜன் 7வது இடத்தில் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |