ரூ.46,000 மதிப்புள்ள ஐபோனை ஆர்டர் செய்த நபருக்கு கிடைத்த சோப்புத் துண்டுகள்!
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் ஆன்லைனில் ஐபோன் ஆர்டர் செய்த நபர் மோசடிக்கு ஆளானார்.
ரூ.46,000 மதிப்புள்ள ஐபோனை ஆர்டர் செய்தவருக்கு மூன்று சோப்பு கட்டிகள் தான் வந்து சேர்ந்தது.
மகாராஷ்டிராவின் தானேவைச் சேர்ந்த 25 வயது நபர், ஆன்லைன் ஷாப்பிங் தளத்திலிருந்து 46,000 மதிப்புள்ள ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்துள்ளார். நவம்பர் 9ஆம் திகதி பார்சல் வந்தபோது, அதைத் திறந்து பார்த்தபோது, மூன்று சோப்புக் கட்டிகள் இருந்தன.
செல்போன் பெட்டியில் சோப்புக் கட்டிகள் வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்த அவர் உடனடியாக பொலிஸில் புகார் அளித்தார்.
இடையில் பார்சலை திறந்து யாராவது ஏமாற்றி இருக்கலாம் என பொலிஸார் கூறுகின்றனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பயந்தர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அடையாளம் தெரியாத குற்றவாளிக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 420 (ஏமாற்றுதல்) இன் கீழ் பொலிஸார் சனிக்கிழமையன்று குற்றத்தைப் பதிவு செய்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
iPhone, Soap cakes, Soap Cakes in iphone box, Online Shopping