துபாயின் புர்ஜ் கலீஃபாவில் 22 சொகுசு குடியிருப்புகளை சொந்தமாக்கிய இந்தியர்... அவரது சொத்து மதிப்பு
உலகின் மிக உயரமான கட்டிடமான துபாயின் புர்ஜ் கலீஃபா அதன் ஆடம்பரத்திற்கு பெயர் பெற்றது. இங்கே ஒரு படுக்கையறை கொண்ட குடியிருப்பு ஒன்றை வாடகைக்கு எடுக்க ஆண்டுக்கு 150,000 முதல் 180,000 திர்ஹம்கள் (ரூ 42 லட்சத்துக்கு மேல்) செலவாகும்.
கேரளாவைச் சேர்ந்த
அதாவது வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த இடங்களில் ஒன்று. ஆனால் பலர் புர்ஜ் கலீஃபாவில் ஒரு குடியிருப்பையாவது சொந்தமாக்க வேண்டும் என்று கனவு காணும் நிலையில், இந்திய வம்சாவளி தொழிலதிபர் ஒருவர் 22 குடியிருப்புகளை இதுவரை சொந்தமாக்கியுள்ளார்.
புர்ஜ் கலீஃபாவின் அரசர் என உள்ளூர் பத்திரிகைகளால் கொண்டாடப்படும் அவர் இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த ஜோர்ஜ் நேரியம்பறம்பில் என்பவரே. ஜோர்ஜ் கேரளாவில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்.
11 வயதில், தனது குடும்பத்தின் நிலை கண்டு தனது தந்தையுடன் சேர்ந்து வேலைக்கு செல்லத் தொடங்கினார். அந்த சிறு வயதிலேயே தொழில் தொடர்பான திறமையை வெளிப்படுத்தியுள்ளார். பருத்தி விதைகளிலிருந்து பசையைப் பிரித்தெடுத்து விற்று பணம் சம்பாதிக்கத் தொடங்கினார்.
1976 இல், புதிய வாழ்க்கை மற்றும் வாய்ப்புகளைத் தேடி ஜோர்ஜ் ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜா மாகாணத்திற்குச் சென்றார். அங்கு, வெப்பமான காலநிலையில் ஏர் கண்டிஷனிங் தேவைப்படுவதைக் கண்டு, சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.
உறவினர் சவால்
சின்னதாக தொடங்கிய நிறுவனம் காலப்போக்கில் GEO குழுமமாக பெரும் வளர்ச்சி கண்டது. உண்மையில் புர்ஜ் கலீஃபாவில் குடியிருப்புகளை வாங்கும் முடிவுக்கு காரணம் அவரது உறவினர் ஒருவர் என்றே கூறப்படுகிறது.
புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் நுழையும் வாய்ப்பு கூட ஜோர்ஜுக்கு அமையாது என அந்த உறவினர் சவால் விட்டுள்ளார். அந்த சவாலை ஏற்றுக்கொண்ட ஜோர்ஜ் தற்போது 22 குடியிருப்புகளை தமக்கு சொந்தமாக்கியுள்ளார்.
இன்று ஜோர்ஜின் சொத்து மதிப்பானது ரூ 4,800 கோடி என்ரே கூறப்படுகிறது. புர்ஜ் கலீஃபாவில் தமது குடியிருப்பை ஜோர்ஜ் தங்கத்தால் இழைத்திருக்கிறார் என்றே கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |