லண்டனில் 24 வயது இளைஞன் காரில் வரைந்திருந்த கொடியால் வந்த வினை! பொலிசார் விதித்த அபராதம்: வெளியான புகைப்படம்
லண்டனில் இளைஞன் ஒருவர் தன்னுடைய காரில் பாலஸ்தீன கொடியை வரைந்திருந்த நிலையில், பொது நபருடன் வாக்குவாததில் ஈடுபட்டதால், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் இருக்கும் Kantor King Solomon உயர்நிலைப பள்ளிக்கு வெளியே, 20 வயது மதிக்கத்தக்க Samiul Islam என்பவர், தன்னுடைய உடன் பிற்பபுகளை(சகோதரிகளை) வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக அங்கு வந்துள்ளார்.
அப்போது அவரின் காரின் முன்பகுதியில், பாலஸ்தீன கொடி வரையப்பட்டிருந்தது. காரில் அவர் காத்துக் கொண்டிருந்த போது, ஆணும், பெண்ணும் அவரை அணுகி பாலஸ்தீனத்தை பற்றி மோசமாக பேசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட, விரைந்து வந்த பொலிஸ் அதிகாரிகள்,பொது ஒழுங்கு சட்டத்தை மீறியதாகவும், துன்புறுத்தல் மற்றும் துயரத்தை ஏற்படுத்தியதாகவும் கூறி, Samiul Islam-க்கு 90 பவுண்ட் அபராதம் விதித்தனர்.
இது தொடர்பான வீடியோவில், Samiul Islam பொலிசாருடன் தனக்கு பிடித்த கொடியை தன்னுடைய காரில் வரைந்திருப்பதாக கூறுவதை காண முடிகிறது. ஆனால், பொலிசார் இதனால் பொது நபர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறுகிறார்.
இது குறித்து பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த புதன் கிழமை மாலை உள்ளூர் நேரப்படி 4 மணிக்கு பொலிசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, ஒரு பாலஸ்தீன கொடி வரைந்த காரில் இருக்கும் நபருக்கும், பொது நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுவதாக தகவல் வந்தது.
இதனால் உடனடியாகா அங்கு விரைந்து, தகராறு செய்தவர்களை எச்சரித்தோம், யாரையும் கைது செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளது, காசாவில் சமீபத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனால் ஏராளமான பாலஸ்தீன குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆயிரக்கணக்கானர் ஆர்ப்பட்டாத்தில் ஈடுபட்டனர். அந்த சம்பவத்தை நினைவில் கொண்டு, அந்த பொது நபர், இந்த் இளைஞரின் காரில் இருக்கும் பாலஸ்தீன கொடியைப் பார்த்து மிரட்ட நினைக்கிறார் என்று வாக்குவாததில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
ஆனால், முழு விபரம் எதுவும் வெளியாகவில்லை.