முகேஷ் அம்பானிக்கு மாதம் ரூ 41 லட்சம் வாடகைக் கட்டணமாக செலுத்தும் நபர்
இந்தியாவின் பெரும் செல்வந்தரான தொழிலதிபரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவருமான முகேஷ் அம்பானி, பெரும்பாலும் ஒப்பிடமுடியாத சொத்து மதிப்புடன் அதிகாரத்தின் உருவகமாகவும் உள்ளார்.
வாடகைதாரர்களில் ஒருவர்
முகேஷ் அம்பானியின் உயர்தர ஜியோ வேர்ல்ட் பிளாசாவில் உள்ள வாடகைதாரர்களில் ஒருவர், உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர். அவர் பிரான்ஸ் குடிமகனான Bernard Arnault என்பவரே.
LVMH நிறுவனரான Bernard Arnault-ன் மொத்த சொத்து மதிப்பு 16,120 கோடி அமெரிக்க டொலர். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 9,660 கோடி அமெரிக்க டொலர்.
Louis Vuitton, Tiffany & Co. மற்றும் Dior உட்பட பல்வேறு ஆடம்பரப் பொருட்களின் மையமாக உள்ளது LVMH நிறுவனம். உண்மையில், பெர்னார்ட் அர்னால்ட் நேரிடையாக முகேஷ் அம்பானிக்கு வாடகைதாரராக இருக்க வாய்ப்பில்லை.
LVMH நிறுவனம்
ஜியோ வேர்ல்ட் பிளாசாவில் Louis Vuitton விற்பனை மையமாக சுமார் 7,465 சதுர அடி பகுதியை வாடகைக்கு எடுத்துள்ளனர். வெளியான தகவலின் அடிப்படையில் மாதம் ரூ 41.70 லட்சம் அதாவது 48,600 அமெரிக்க டொலர் வாடகையாக முகேஷ் அம்பானிக்கு செலுத்தப்படுகிறது.
இது மட்டுமின்றி, இதே ஜியோ பிளாசாவில் மாதம் ரூ 40 லட்சம் வாடகைக்கு இன்னொரு பகுதியையும் LVMH நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த உயர்தர வணிக வளாகத்தின் இலக்கு இந்திய சந்தையில் ஆடம்பரத்தை மறுவரையறை செய்வதாகவே கூறுகின்றனர்.
உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றில் தங்கள் இருப்பை விரிவுபடுத்த விரும்பும் உயர்தர உலகளாவிய பிராண்டுகளை ஜியோ பிளாசா ஈர்த்து வருவதாகவும் கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |