பிரான்சில் ஒலிம்பிக் தீபம் ஏந்தி ஓடும் பாதையில் மோசமான தாக்குதலுக்கு திட்டம் தீட்டிய நபர்
ஒலிம்பிக் போட்டிகளை எந்த பிரச்சினையுமின்றி நல்லபடியாக நடத்திமுடித்துவிட பிரான்ஸ் அரசு தன்னாலியன்ற நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிலையில், ஒலிம்பிக் தீபம் ஏந்தி ஓடும் பாதையில் மோசமான தாக்குதலுக்கு திட்டம் தீட்டிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒலிம்பிக் தீபம் ஏந்தி ஓடும் பாதையில் மோசமான தாக்குதலுக்கு திட்டம்
ஒலிம்பிக் தீபம் ஏந்தி ஓடும் பாதையில் பலரை படுகொலை செய்ய திட்டம் தீட்டிய ஒருவரை, செவ்வாயன்று பிரெஞ்சு பொலிசார் Eysines என்னுமிடத்தில் கைது செய்து காவலில் அடைத்துள்ளார்கள்.
அந்த 26 வயது நபர், தன்னை எந்தப் பெண்ணும் காதலிக்கவோ, தன்னுடன் உறவுகொள்ளவோ முன்வராததால், பெண்கள் மீது வெறுப்பு ஏற்பட்டு அதனால் கொலை செய்யும் ஒரு அமைப்பை பின்பற்றுபவர் என தெரியவந்துள்ளது.
இதேபோல, பெண்கள் மீதான வெறுப்பால் கொலை செய்யும் incel என்னும் அமைப்பை ஆதரிக்கும் Elliot Rodger (22) என்னும் அமெரிக்கர். ஆறு பேரைக் கொன்று. 14 பேரை காயப்படுத்திய நிலையில், தற்போது பிரான்சில் கைது செய்யப்பட்ட நபர், Elliot Rodgerஐக் குறித்து தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |