கொதிக்கும் காபியை குழந்தை மீது கொட்டிவிட்டு சீனாவிற்கு தப்பியோடிய நபர்
அவுஸ்திரேலியாவில் கொதிக்கும் காபியை அப்பாவி குழந்தை ஒன்றின் மீது கொட்டிவிட்டு சீனாவிற்கு தப்பிய நபர் இனி ஒருபோதும் நீதிமன்றத்தை எதிர்கொள்ள வாய்ப்பில்லை என்ற தகவல் குடும்பத்தினரை கலங்கடித்துள்ளது.
சூடான காபி
ஒன்பது மாதக் குழந்தையான லூகா மீது அந்த நபர் கொதிக்கும் சூடான காபியை ஊற்றியதில் பயங்கர தீக்காயங்கள் ஏற்பட்டன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27ம் திகதி பிரிஸ்பேனின் ஹான்லான் பூங்காவில் ஒரு சுற்றுலாவின் போது இந்த கோர சம்பவம் நடந்துள்ளது.
ஆனால் இந்த கோர சம்பவத்திற்கு காரணமான அந்த நபர் சீனாவிற்கு தப்பியோடியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சீன சட்டத்தின் கீழ் அவர் அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படுவார் என்பது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை கலங்கடித்துள்ளது.
சட்டத்தின் கீழ்
சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் கடந்தும், லூகாவிற்கு தற்போதும் வடுக்களுக்கு வழக்கமான அறுவை சிகிச்சை முன்னெடுக்கப்பட்டுகிறது. வழக்கை எதிர்கொள்ள அந்த நபரை திருப்பி அனுப்புமாறு அவுஸ்திரேலிய அதிகாரிகள் வலியுறுத்தி வந்தாலும், சீன அதிகாரிகளால் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவால் தனது குடிமகன் ஒருவரை விசாரணைக்காக நாடு கடத்த முடியும், ஆனால் சட்டத்தின் கீழ் அதை நிராகரிக்கவும் இடம் உள்ளது என்பதால், அவர்கள் சட்டத்தை இந்த விடயத்தில் சாதகமாக பயன்படுத்துவதாக அவுஸ்திரேலிய ஃபெடரல் காவல்துறை முன்னாள் அதிகாரி டாக்டர் டேவிட் கிரெய்க் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |