கனடாவின் நயாகராவில் இந்திய இளைஞருக்கு ஏற்பட்ட துயரம்: கைவிட்ட பொலிசார்
கனடாவின் நயாகராவில் சுழலில் சிக்கி மாயமான இந்திய இளைஞர் தொடர்பில் நண்பர்களும் உறவினர்களும் முன்வைத்த கோரிக்கையை பொலிசார் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுழலில் சிக்கி மாயமான
நயாகரா நதியில் சுழலில் சிக்கி மாயமான 25 வயது Shubham Manchanda இறந்திருக்கலாம் என்றே நம்பப்படுகிறது. சனிக்கிழமை ஏற்பட்ட இந்த சம்பவத்தில் பொலிசார் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுத்தும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
இந்த நிலையில் நண்பர்கள் மற்றும் உறவினரின் கோரிக்கைகளை நிராகரித்து தேடுதல் நடவடிக்கையை கைவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்றாண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து கனடா வந்த Manchanda ஓஷாவாவில் உள்ள டர்ஹாம் கல்லூரியில் இணைந்து பட்டம் பெற்றுள்ளார்.
Thorold பகுதியில் வசித்து வந்த இவர் கடந்த 6 மாதங்களாக St. Catharines என்ற மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றியும் வந்துள்ளார். இயற்கை விரும்பியான இவர் ஜூன் 15ம் திகதி நண்பர்களுடன் நயாகரா நதிப்பகுதிக்கு சென்றுள்ளார்.
கண்காணிப்பு தொடரும்
ஆனால் பாறை ஒன்றில் இருந்து கால்தவறி கீழே விழுந்த Manchanda சுழலில் சிக்கி மாயமாகியுள்ளார். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த நயாகரா பிராந்திய காவல்துறை, நயாகரா நீர்வீழ்ச்சி தீயணைப்பு துறை மற்றும் கனடிய கடலோர காவல்படை ஆகியோர் இணைந்து தேடினர் ஆனால் பலனில்லை.
நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சமூக ஊடகம் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதுடன், தொடர்ந்து தேடவும் பொலிசாரை ஊக்குவித்துள்ளனர். ஆனால் புதன்கிழமை தேடுதல் நடவடிக்கைகளை கைவிட்ட பொலிசார், Manchanda இறந்திருக்கலாம் என்றும், கண்காணிப்பு தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |