சுவிட்சர்லாந்தில் சுற்றுலாப்பயணியை தாக்கிய புகலிடக்கோரிக்கையாளருக்கு சிறை
சுவிட்சர்லாந்தில் யூத சுற்றுலாப்பயணி ஒருவரைத் தாக்கிய புகலிடக்கோரிக்கையாளர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப்பயணியை தாக்கிய புகலிடக்கோரிக்கையாளர்
2024ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் 23ஆம் திகதி, அல்ஜீரியா நாட்டவரான 24 வயதுடைய புகலிடக்கோரிகையாளர் ஒருவர், 19 வயதுடைய யூத சுற்றுலாப்பயணி ஒருவரை டாவோஸில் வைத்து தாக்கினார்.
செப்டம்பர் மாதம் அவர் பெல்ஜியம் நாட்டுக்கு நாடுகடத்தப்பட்டார்.
இந்நிலையில், தாக்குதல் நடத்திய அல்ஜீரியா நாட்டவருக்கு சுவிட்சர்லாந்தில் ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவருக்கு 765 ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், வழக்குச் செலவுக்காக அவர் 3,000 ஃப்ராங்குகள் வழங்கவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விடயம் என்னவென்றால், குற்றம் சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் சுவிட்சர்லாந்திலும் இல்லை. அவர் இப்போது எங்கிருக்கிறார் என்பதும் தெரியவில்லை.
ஆக, அவர் சுவிட்சர்லாந்தில் கால் வைக்கும்போது, அவர் பொலிசாரிடம் சிக்கினால், அவர் சிறையிலடைக்கப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |