தனது காதலனுடன் வேறொரு பெண்ணின் புகைப்படம்... படத்தை உற்றுக்கவனித்த இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
அமெரிக்காவில் பேஸ்புக்கில் தனது காதலனுடன் வேறொரு பெண் இருக்கும் புகைப்படம் ஒன்றைக் கண்ட காதலி, அந்த பெண்ணின் கையில் தனது திருமண மோதிரம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தனது வீட்டுக்குச் சென்று தனது நகைப்பெட்டியை அவர் திறந்துபார்த்தபோது, தனது திருமண மோதிரம் மட்டுமல்ல, சுமார் 6,270 டொலர்கள் மதிப்புடைய தனது நகைகளும் காணாமல் போயிருப்பதைக் கண்டு திகைத்துப்போயுள்ளார் அவர்.
Joe Brown என்ற தனது காதலனுடன் இருக்கும் பெண்ணுக்கு அவர் இது குறித்து குறுஞ்செய்தி அனுப்ப, பல உண்மைகள் வெளியாகத்தொடங்கியுள்ளன.
Orange City என்ற இடத்தில் வாழும் இந்த பெண்ணிடம் தன் பெயர் Joe Brown என்று கூறியிருந்த அதே நபர், Orlandoவில் வாழும் அந்த பெண்ணிடம் தன் பெயர் Joseph Davis என்று கூறியிருக்கிறார்.
முதல் காதலியிடம் திருடிய மோதிரத்தைக் கொண்டுதான் அவர் இரண்டாம் காதலியிடம் புரபோஸ் செய்துள்ளார்.
உண்மை தெரியவரவே, இரண்டு பெண்களுமாக பொலிஸ் நிலையம் செல்ல, அங்கே அவர்களுக்கு வேறொரு அதிர்ச்சி காத்திருந்தது.
Joseph Davis, பொலிசாரால் தேடப்படும் ஒரு குற்றவாளி! ஆக, இரண்டு பெண்களும் Joseph Davisஐ கைகழுவிவிட்டு, அவரை பிடித்துக்கொடுக்க பொலிசுக்கு உதவ முன்வந்துள்ளார்கள். தலைமறைவாகிவிட்ட Joseph Davisஐ பொலிசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.