ரூ.20 லட்சத்துக்கு Tata Nexon காரை வாங்கியவருக்கு அதிர்ச்சி.., பதிலளித்த நிறுவனம்
ரூ.20 லட்சத்துக்கு டாடா நிறுவனத்தின் நெக்ஸான் கார் வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர், காரில் குறைபாடுகள் இருந்ததால் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக கூறியுள்ளார்.
Tata Nexon
பெங்களூருவைச் சேர்ந்த சரத்குமார் என்பவர் டாடா நிறுவனத்தின் ரூ.18.2 லட்சம் மதிப்பிலான Nexon காரில் கூடுதலாக சில அம்சங்களை சேர்த்ததில் மொத்தம் ரூ.20 லட்சத்தை செலவிட்டுள்ளார். ஆனால், அவருக்கு காரை வாங்கிய பின்னரே அதில் குறைபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக சரத்குமார் கார் டீலருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் காரின் குறைபாடுகள் குறித்து சமூக வலைத்தளமான இன்ஸ்ட்டாவில் வெளிச்சப்படுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்ட வீடியோவில், "நான் எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் Tata Nexon காரை வாங்க சென்றிருந்தேன். ஆனால், அங்கு சென்ற பிறகு எங்களுக்கு கிடைத்த டாடா நெக்ஸானின் குறைபாடுகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்" எனக் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், காரின் முன்பக்க பம்பரில் கீறல்கள், ஹெட்லைட்களில் தண்ணீர், கீறப்பட்ட டெயில்கேட் பிரேம் மற்றும் கதவின் ஸ்க்ஃப்பில் வெல்டிங் குறைபாடு ஆகியவை இருந்ததாக கூறியுள்ளார்.
நீதிமன்றத்தை நாடிய வாடிக்கையாளர்கள்
மேலும், டாடா நிறுவனமோ அல்லது கார் டீலரோ தனக்கு புதிய காரை வழங்கவோ, கார்களில் உள்ள சிக்கல்களை தீர்க்கவோ எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என சரத்குமார் கூறியுள்ளார்.
இவரது வீடியோ வைரலானதுக்கு பிறகு டாடா நிறுவனத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக பதில் அளித்துள்ளனர். அதில், "உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். உங்களுடைய இமெயில் ஐ.டியை பகிரவும். எங்களுடைய குழு உங்களை தொடர்பு கொள்ளும்" எனக் கூறப்பட்டிருந்தது.
இதற்கு பதில் அளித்த சரத்குமார், "சட்ட நடவடிக்கையில் தான் இறங்கிவிட்டதால், நீதிமன்றத்தில் மிச்சத்தை பார்த்துக்கொள்வோம்" எனக் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |