நகம் வெட்டும் கருவியால் நாகப் பாம்பின் பற்களை பிடுங்கிய நபர் கைது
இந்தியாவில், நகம் வெட்டும் கருவியால் விஷப் பாம்பின் பற்களை பிடுங்கிய நபர் கைது செய்யப்பட்டார்.
இந்திய மாநிலம் ஒடிசாவின் பலங்கிர் மாவட்டத்தில் உள்ள புய்ந்தலா காவல் துறையினர், நகம் வெட்டும் கருவி மூலம் நாகப்பாம்பின் பற்களை அகற்றிய நபரை இன்று கைது செய்தனர்.
புய்ந்தலா பொலிஸ் எல்லைக்குட்பட்ட பிலேசரடா கிராமத்தைச் சேர்ந்த பீரா பிஸ்வால் என்பவர் கிராமத்தில் இருந்து விஷப் பாம்பை பிடித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. பின்னர், பொதுமக்கள் பார்வைக்கு நெயில் கட்டர் மூலம் அதன் பற்களை வலுக்கட்டாயமாக பிடுங்கினார்.
இந்த முழு சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பொதுமக்கள் மற்றும் விலங்கு பிரியர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. அதையடுத்து, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதற்கு எதிராக குரல் எழுப்பினர்.
அதன்பேரில், உள்ளூர் வனத்துறை அதிகாரி கேசப் நாயக், ஒரு குழுவுடன் சேர்ந்து பீராவைக் கைது செய்து பாம்பை மீட்க சனிக்கிழமையன்று அவரது வீட்டில் சோதனை நடத்தினார், ஆனால் பலனில்லை. அவர் அங்கிருந்து தப்பிவிட்டார். வீடியோவை காண இங்கு கிளிக் செய்யவும்
இறுதியாக, குற்றம் சாட்டப்பட்ட நபர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புய்ந்தலா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
பிடிக்கப்படும் பாம்புகளை, காட்டுக்குள் விடாமல் சித்திரவதை செய்து மக்கள் முன்னிலையில் ஸ்டண்ட் செய்து வந்ததாக கூறப்படுகிறது.