சுவிட்சர்லாந்தில் கிரேனில் சிக்கிக்கொண்ட கட்டுமானப் பணியாளர்
சுவிட்சர்லாந்தில், கிரேன் ஒன்றில் ஏறிய கட்டுமானப் பணியாளர் ஒருவர், 30 மீற்றர் உயரத்தில் சிக்கிக்கொண்டார்.
கிரேனில் சிக்கிக்கொண்ட கட்டுமானப் பணியாளர்
நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, சுவிட்சர்லாந்தின் Schaffhausen நகரில், கட்டுமானப்பணிக்காக 30 மீற்றர் உயரமுள்ள கிரேனில் ஏறியுள்ளார் ஒரு இளைஞர்.

உடலில் பொருத்தப்பட்ட கயிற்றுடன் கிரேனில் ஏறிய அந்த 20 வயது இளைஞர், கிரேனிலேயே சிக்கிக்கொண்டுள்ளார்.
தன்னை விடுவித்துக்கொள்ளமுடியாமல் அவர் தவித்த நிலையில், கீழே இருந்த பெண்ணொருவர் காலை 7.30 மணியளவில் அவரைக் கவனித்துள்ளார்.
உடனடியாக அவர் அவசர உதவியை அழைக்க, பொலிசாரும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து, கிரேனை கட்டிடம் ஒன்றின் அருகில் கொண்டுவந்து, ஏணி ஒன்றின் உதவியுடன் அவரை கீழே கொண்டுவந்துள்ளனர்.
உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சோகம் என்னவென்றால், அவரை மீட்பதற்காக செய்யப்பட்ட செலவை அவரே ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலை உருவாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |