எச்சரிக்கையை மீறி கடல் பயணம்.. சிக்கிய அவுஸ்திரேலிய வீரர்! உயிரை காப்பாற்றிய வாட்ச்
அவுஸ்திரேலியாவில் அலையில் சிக்கிய வீரர், ஆப்பிள் வாட்ச் மூலம் அளித்த தகவலினால் காப்பாற்றப்பட்டார்.
அவுஸ்திரேலியாவில் சிட்னி நகரில் பால்மோரலில் இருந்து கடற்பகுதிக்கு சறுக்கு வீரரான கயகெர் தனது நண்பருடன் தனி தனி படகில் பயணித்தார். ஒன்றாக பயணித்த அவர்கள் ஒரு கட்டத்தில் பிரிந்தனர்.
அப்போது பலத்த காற்று வீசியதால் கயகெர் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார். உடனடியாக நிலைமையை புரிந்துகொண்ட அவர், தனது கையில் கட்டியிருந்த ஆப்பிள் ஸ்மாட் வாட்ச் மூலம் அவரச உதவியை அழைத்தார்.
அதனைத் தொடர்ந்து மீட்புப் படையினர் அப்பகுதிக்கு ஹெலிகாப்டரில் விரைந்தனர். கரையில் இருந்து 4 கிலோ மீற்றர் தொலைவில் கயகெர் கண்டுபிடிக்கப்பட்டார்.
தப்பிக்க நீண்ட நேரம் போராடியதால் அவர் மிகவும் சோர்வடைத்திருந்தார். பின்னர் மீட்பு படையினர் அவருக்கு ஏணியை கொடுத்து பத்திரமாக மீட்டனர். தனக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என கூறி அவர் சிகிச்சை பெற மறுத்தார்.
அவரது நண்பரை தேடும் பணி தொடங்கியது. பின்னர் தொலைபேசியில் அவரை பொலிசார் தொடர்கொண்டபோது கரைக்கு திரும்பிவிட்டதாக தெரிவித்ததால், தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.
சிட்னி கடற்கரைக்கு வானிலை ஆய்வு மையம் அபாயகரமான அலைச்சறுக்கு எச்சரிக்கையை விடுத்திருந்தது. இந்த நிலையில் தான் கயகெர் தனது நண்பருடன் கடலில் பயணித்துள்ளார். அவர் உயிருடன் தப்பித்தது அதிர்ஷ்டம் தான் என்று மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.