உதவி கேட்டு சுவருக்குள் எழுந்த கூக்குரல்: 12 மணி நேர போராட்டம்..அடுத்து நடந்த ட்விஸ்ட்
அமெரிக்காவில் திரையரங்கின் கூரையில் இருந்து 22 அடி சுவருக்குள் விழுந்த நபர், 12 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டார்.
சுவரிலிருந்து வந்த சத்தம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மாயா சினிமாஸ் மற்றும் Brewje என்ற காபி கடைக்கும் இடையேயான சுவரில் இருந்து, உதவி கேட்டு மங்கலான கூக்குரல்கள் கேட்டுள்ளது.

உடனே அங்கிருந்த ஊழியர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு வந்த அதிகாரிகள் சுவருக்குள் ஒரு நபர் சிக்கியிருப்பதை கண்டுபிடித்தனர்.
பின்னர் மீட்புப் படையினர் 2 மணிநேர போராட்டத்திற்கு பிறகு அந்நபர் மீட்கப்பட்டார். ஆனால் அவர் 12 மணிநேரம் அதில் சிக்கியிருந்துள்ளார்.
சிகிச்சைக்கு பின் சிறை
அவர் 30 வயதான ஐசக் வலென்சியா என்று தெரிய வந்தது. மேலும், பல அடி உயரத்தில் இருந்து திரையரங்கின் சுவருக்குள் விழுந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது.
சலினாஸ் தீயணைப்புத் துறையின் ஆரம்பகட்ட தகவல்களின்படி, வலென்சியா மாயா சினிமாஸின் பிரதான விளம்பரப் பலகைக்கு அருகில் இருந்த கூரையில் இருந்து 1 அடிக்கு 2 அடி அளவுள்ள ஒரு திறப்பிற்குள் விழுந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து சிறிய முதுகு காயத்திற்கு பின் கொள்ளை வழக்கிற்காக, மான்டேரி கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |