14 ஆண்டுகள் கனடாவில் வாழ்ந்தபிறகு இந்தியா திரும்பியுள்ள நபரின் ஏழு ஆலோசனைகள்
இந்தியர் ஒருவர் கனடாவில் 14 ஆண்டுகள் வாழ்ந்த நிலையில், தற்போது மீண்டும் இந்தியாவுக்கே திரும்பியுள்ளார்.
சொந்தநாடு திரும்பியபின் வாழ்க்கை எப்படி உள்ளது என்பதைக் கூறி, தன்னைப்போல் சொந்தநாட்டுக்குத் திரும்ப விரும்புபவர்களுக்கு ஏழு ஆலோசனைகளையும் கூறியுள்ளார் அவர்.
இந்தியா திரும்பியுள்ள நபரின் ஏழு ஆலோசனைகள்
சொந்த நாட்டுக்குத் திரும்பியது ஆறுதலை அளிப்பதாக உள்ளதாக தெரிவிக்கும் அவர், அதே நேரத்தில், கனடாவிலிருந்து இந்தியா திரும்பி, நிரந்தரமாக இந்தியாவிலேயே தங்கிவிட விரும்புவோர் சில விடயங்களை கருத்தில் கொள்வது நல்லது என்கிறார்.
1. இந்தியாவில் நிரந்தரமாக தங்க முடிவெடுக்கும் முன், இந்தியா வந்து சில மாதங்கள் தங்கிப் பார்த்து, தங்களால் இந்தியாவில் சமாளிக்க முடியுமா என்பதை உறுதி செய்துகொள்ளுமாறு அறிவுறுத்துகிறார் அவர்.
2. கனடாவில் வாழ்ந்துவிட்டு இந்தியா திரும்பிய தனக்கு காற்று மாசு அதிர்ச்சியை உருவாக்கியதாக தெரிவிக்கிறார் அவர். ஆனால், அவர் எந்த நகரத்தில் வாழ்கிறார் என்பதை குறிப்பிடவில்லை.
3. பண்டிகைகள் கொண்டாடுவது மகிழ்ச்சிதான் என்று கூறும் அவர், அதே நேரத்தில், பண்டிகளின்போது சத்தம் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கிறார்.
4. வெளியே சாப்பிடும்போது, சுகாதாரத்தில் கவனம் செலுத்தவேண்டியது அவசியம் என்றும் ஆலோசனை கூறியுள்ளார் அவர்.
5. தண்ணீர் ஃபில்டர்கள் கட்டாயம் என்று கூறும் அவர், தங்கள் குடும்பம் விலை கொடுத்து குடிதண்ணீர் போத்தல்களை வாங்கிப் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
6. இந்தியாவில் வெறும் கோடையும் குளிர்காலமும் மட்டும் இல்லை. பல பருவநிலைகள் நிலவுகின்றன. ஆகவே, பருவமழைக் காலத்தில் பெருவெள்ளம், கோடையில் வெப்பம், குளிர்கால பனி என பல விடயங்களை சமாளித்தாகவேண்டும் என்றும் கூறியுள்ளார் அவர்.
7. கடைசியாக, இப்போதுள்ள இளைஞர்கள் மாறிவிட்டார்கள். வாழ்க்கை குறித்த அவர்களுடைய பார்வையும், வாழ்க்கைமுறையும் வெகுவாக மாறிவிட்டன என்று கூறும் அவர், இந்தியாவுக்கு நிரந்தரமாக திரும்புவோர், இவற்றையெல்லாம் கருத்தில் கொள்வது நல்லது என்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |