கனடா செல்வதற்கான விசா வர தாமதமானதால் இளைஞர் தற்கொலை! உயிரிழந்த அடுத்தநாள் வந்த விசா
கனடா செல்வதற்கான விசா வர தாமதமானதால் விரக்தியடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துரதிஷ்டவசமாக அவர் உயிரிழந்த அடுத்தநாள் விசா அவர் வீட்டிற்கு வந்துள்ளது. இந்தியாவின் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் விகேஷ் சைனி (23). பட்டப்படிப்பு படித்துள்ள இவர் மேற்படிப்பு படிப்பதற்காக கனடாவுக்கு செல்ல முடிவு செய்து விசாவுக்கு விண்ணப்பித்தார்.
விசா வருவதில் தாமதம் ஏற்பட்டதால் விகேஷ் விரக்தியில் இருந்தார். இதையடுத்து நேற்று முன் தினம் அங்குள்ள கால்வாயில் குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டார்.
ndtv
விகேஷ் வீட்டில் இருந்து காணாமல் போனதை அறிந்த குடும்பத்தார் அவரை தேடிய போதே அவர் உயிரை மாய்த்து கொண்டது தெரியவந்தது.
விகேஷ் உயிரிழந்த அடுத்தநாள் அவர் வீட்டிற்கு விசா வந்தது தான் பெருஞ்சோகம்.
அவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.