உணவகத்தில் இறைச்சி ஆர்டர் செய்த நபர்... இறைச்சி கொடுத்த அதிர்ச்சி
அமெரிக்காவில் நண்பர்களுடன் உணவகம் ஒன்றிற்கு சென்ற ஒருவருக்கு, தான் ஆர்டர் செய்த இறைச்சியின் அளவு குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது. டெக்சாசிலுள்ள உணவகம் ஒன்றிற்கு பிறந்த நாள் பார்ட்டி ஒன்றிற்காக நண்பர்களுடன் சென்றார் Antonio Chacon (22).
பலவகை உணவுகளை நண்பர்கள் ஆர்டர் செய்ய, தான் இறைச்சி ஆர்டர் செய்துள்ளார் Antonio.
ஆனால், தான் ஆர்டர் செய்த இறைச்சித்துண்டு மிகவும் சிறியதாக இருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்துள்ளார் Antonio. உடனே, தான் காரில் வைத்திருந்த எலக்ட்ரானிக் தராசு ஒன்றை எடுத்துவந்த Antonio, உணவக ஊழியர் கண்களுக்கு முன்பாகவே அதை எடை போட, என்ன செய்வதென தெரியாமல் விழித்துக்கொண்டிருந்திருக்கிறார் அந்த ஊழியர். Antonio ஆர்டர் செய்த இறைச்சியின் எடை 200 கிராம்.
ஆனால், Antonio அதை எடை போட்டபோது, அது வெறும் 100 கிராம்தான் இருந்தது. இந்த விடயத்தை சமூக ஊடகம் ஒன்றில், உணவகத்தின் பெயருடன் பதிவேற்றம் செய்துவிட்டார் Antonio.
அவரது இடுகை 92,000 பேரால் பகிரப்பட்டுள்ளதுடன் 16,000 ரியாக்ஷன்களை பெற்றுள்ளது. இவ்வளவு வளர்ந்த அமெரிக்காவிலேயே எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் பாருங்கள்!