முதல் மனைவி தலைமையில் 2-வது திருமணம்! ஒரே வீட்டில் மூவரும் வாழ்ந்த நிலையில் கணவர் தப்பியோட்டம்... பகீர் காரணம்

Wedding Marriage
By Raju Oct 02, 2022 04:10 AM GMT
Report

முதல் மனைவி சம்மதத்தோடு 2வது திருமணம் செய்து கொண்ட நபர் வீட்டில் இருந்து தப்பியோட்டம்.

மனைகளின் தொல்லை தாங்க முடியாமல் தலைமறைவு என தகவல்.

முதல் மனைவி சம்மதத்தோடு 2வது திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் மூவரும் குடித்தனம் நடத்திய நிலையில் மனைவிகளின் தொல்லையால் கணவர் வீட்டை விட்டு ஓடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த டிக் டாக் பிரபலம் கல்யாண். இவருக்கும் கடப்பாவை சேர்ந்த விமலா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் வீடியோக்கள் எடுப்பது மூலம் தொடர்பு ஏற்பட்டது.

அந்த தொடர்பு காதலாக மாறி சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். சில மாதங்களாக விமலா சோகமாக இருந்து உள்ளார். ஏன் என்று விமலாவிடம் பலமுறை கல்யாண் கேட்டு உள்ளார். அப்போது தான் விசாகபட்டனத்தை சேர்ந்த நித்யாஸ்ரீ என்பவர் தன்னை சந்தித்தகாக கூறினார்.

கல்யாண் திருமணத்திற்கு முன் விசாகபட்டினத்தை சேர்ந்த நித்யாஸ்ரீ என்பவருடன் சேர்ந்து டிக் டாக் வீடியோ உருவாக்கி வந்துள்ளார். அப்போது இருவரும் காதலித்து உள்ளனர். சில காலம் நன்றாக இருந்த காதல் சில காரணங்களால் முறிந்தது. தொலைபேசி தொடர்பும் துண்டிக்கப்பட்டது.

கல்யாண் கடைசியில் அவரை மறந்து விமலாவை மணந்து உள்ளார். திடீரென்று இப்போது நித்யாஸ்ரீ இவர்கள் வாழ்க்கைக்குள் நுழைந்து உள்ளார். நேரடியாக விமலாவிடம் சென்று விவரத்தை கூறி உள்ளார். எந்த மனைவியும் செய்யாத ஒரு தியாகத்தை செய்ய விமலா தயாராகிவிட்டார். விமலா தனது கணவர் கல்யாணை அவரது காதலி நித்யஸ்ரீயை திருமணம் செய்து வைக்க தயாரானார்.

முதல் மனைவி தலைமையில் 2-வது திருமணம்! ஒரே வீட்டில் மூவரும் வாழ்ந்த நிலையில் கணவர் தப்பியோட்டம்... பகீர் காரணம் | Man Second Marriage Abscond Wives Search

ஆனால் தானும் அவர்களுடன் இருக்க வேண்டும் என சத்தியம் வாங்கி கொண்டார். திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் முதல் மனைவியே முன்னின்று கவனித்தது செய்துவைத்தார். கணவனையும் காதலியையும் கோவிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து வைத்தார். இந்த நிலையில் இந்த திருமணம் முடிந்து 3 பேரும் திடீரென காணாமல் போய்விட்டார்கள்.இவர்களை பேட்டி எடுக்க நிறைய பத்திரிகையாளர்கள் தேடியிருக்கிறார்கள்.

ஆனால், எங்கே போனார்கள் என்பது சஸ்பென்ஸ் ஆக இருந்தது தற்போது, நேற்று முன்தினம் கல்யாண் வீட்டை விட்டே ஓடிவிட்டார் என்ற தகவல் வெளியானது. இரண்டு மனைவிகளின் தொந்தரவு தாங்க முடியாமல், கல்யாண் தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்டது. இதற்கு காரணமும் தற்போது வெளியாகி உள்ளது. முதல் மனைவி விமலா ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணம் ஆனவராம். 2 குழந்தைகளும் இருக்கிறார்கள்.

இது அந்த ஊர் பஞ்சாயத்து உட்பட அனைவருக்குமே தெரியும் என்கிறார்கள். ஊர் பஞ்சாயத்துக்கு கட்டப்பட்டுத்தான், விமலா, தன்னுடைய கணவருக்கு 2வது திருமணத்தையே செய்து வைத்துள்ளார். இப்போது விஷயம் என்னவென்றால் 3 பேரும் ஒரே வீட்டில் ஒன்றாக இருக்க வேண்டும் என்று கல்யாணிடம் சத்தியம் வாங்கியிருந்த நிலையில், சிக்கலே அந்த சத்தியத்தில்தான் வந்துள்ளது.

நித்யஸ்ரீ வீட்டிற்கு வந்த சில நாட்களில் அவருக்கும் விமலாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பிரச்சனையை ஆரம்பித்ததே நித்யஸ்ரீதானாம். விமலாவை அவரது முதல் கணவனுடன் அனுப்பி வையுங்கள் என்று கல்யாணை இவர் நச்சரித்துள்ளார். இந்த சண்டை பெரிதாக கல்யாண் வீட்டிலிருந்து தப்பியுள்ளார். இரண்டு மனைவிகளும் தற்போது கல்யாணை தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US