திருமணத்துக்காக பணம் சேமிக்க பிரான்ஸ் நாட்டவர் செய்துள்ள வித்தியாசமான விடயம்
பிரான்ஸ் நாட்டவர் ஒருவர், தன் திருமணச் செலவுகளுக்கு பணம் சேமிப்பதற்காக தன் டக்சிடோவை விளம்பரப் பலகையாக பயன்படுத்தியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டவர் செய்துள்ள வித்தியாசமான விடயம்

பிரான்ஸ் நாட்டவர் ஒருவர், தன் திருமணச் செலவுகளுக்கு பணம் சேமிப்பதற்கு என்ன செய்வது என யோசித்துக்கொண்டிருக்கும்போது, அவருக்கு வித்தியாசமான ஐடியா ஒன்று தோன்றியுள்ளது.
Currently getting people to sponsor my wedding and pass it as business expense under advertising. Sold 7 spots today. https://t.co/p8tK3q1rWl pic.twitter.com/i2OmLlTKnp
— Dagobert - Corporate sellout 👔 (@dagorenouf) July 24, 2025
தனது திருமணத்துக்கான செலவை ஏற்கும் நிறுவனங்களுக்காக, தனது டக்சிடோவையே விளம்பரப் பலகையாக பயன்படுத்த முடிவு செய்துள்ளார் அவர்.
இதெல்லாம் சாத்தியப்படுமா என முதலில் தோன்றினாலும், சில நிறுவனங்கள் உண்மையாகவே அவரது ஐடியாவை ஏற்றுக்கொண்டுள்ளன.
இப்படி வித்தியாசமாக யோசித்த அந்த பிரான்ஸ் நாட்டவரின் பெயர், Dagobert Renouf. அவர் ஒரு தொழிலதிபர் ஆவார்.
26 நிறுவனங்கள் அவரது ஐடியாவுக்கு சம்மதம் தெரிவித்த நிலையில், இன்னொரு பக்கம் அவர் குறித்த செய்தி இணையத்தில் வைரலாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |