சிறுமிகளை ஒன்லைனில் துஷ்பிரயோகம் செய்த பிரித்தானியர்! 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
கிராஃப்ட் இளம் பெண்களை ஆதிக்கம் செலுத்தும் மற்றும் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் ஆன்லைன் அரட்டை தளங்களில் தேடியிருக்கிறார்
கிராஃப்ட் ஒரே தளத்தில் மட்டும் 5,000 பேருடன் தொடர்பு வைத்திருந்தது தேசிய குற்றவியல் நிர்வனத்தின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது
பிரித்தானியாவில் சிறுமிகளிடம் ஒன்லைன் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதால் கைதான நபருக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Worthing நகரைச் சேர்ந்த ஜோர்டான் கிராஃப்ட் என்ற நபர், சில மாதங்களுக்கு முன்னர் ஒன்லைனில் சிறுமிகளிடம் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார்.
இவர் 12 முதல் 22 வயதுடைய 26 பேரிடம் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டதாக ஆகத்து மாதம் சுமத்தப்பட்ட 65 குற்றங்களை ஒப்புக் கொண்டார்.
சிறுவனாக தன்னை ஒன்லைனில் அறிமுகப்படுத்திக் கொண்டு கிராஃப்ட் பல சிறுமிகளிடம் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வார். பின் அவர்களை பாலியல் அடிமைத்தன ஒப்பந்தத்தில் நுழையும்படி கட்டாயப்படுத்தியுள்ளார்.
Eddie Mitchell
மேலும் அவர்கள் இந்த ஒப்பந்தததில் நுழைவதை வாய்மொழியாக உறுதிப்படுத்திக் கொள்ளவும் செய்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து, பாலியல் மற்றும் பிற இழிவான செயல்களை அவர்கள் செய்யும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் அனுப்பும்படி கோரியுள்ளார்.
அத்துடன் கிராஃபிக் கோரிக்கையையும் வைத்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களில் சிலர் தங்களை தாங்களே துஷ்பிரயோகம் செய்ய வேண்டும் எனவும் அவரால் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
Sussex News and Pictures