கனடாவில் 30 வயதான இளம்பெண் மற்றும் அவரின் குழந்தை உயிரிழப்பு! குற்றவாளிக்கு தண்டனை அறிவிப்பு
கனடாவில் வாகன விபத்தில் தாயார் மற்றும் குழந்தையை கொன்ற குற்றவாளிக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மணிடோபாவை சேர்ந்த Armand Chartrand என்பவரே தண்டனை பெற்றவர் ஆவார்.
அதன்படி கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி ஆண்ட்ரூஸ் சாலை மற்றும் போயட் அவென்யூவில் Jennifer Dethmers (30) மற்றும் அவரின் குழந்தை Anthony மீது கார் மோதியது.
இந்த விபத்தில் அதே நாளில் Jennifer உயிரிழந்த நிலையில் அடுத்த ஒரு மாதம் கழித்து குழந்தை Anthony உயிரிழந்தான்.
இந்த சம்பவத்தில் காரை அதிவேகமாக ஓட்டி அவர்கள் மீது மோதிய குற்றத்திற்காக Armand Chartrand கைது செய்யப்பட்டார்.
அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் Armand குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து அவருக்கான தண்டனை விபரம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி Armandக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, வாழ்நாள் முழுவதும் வாகனம் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.