இங்கிலாந்திலுள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றிற்கு அழைக்கப்பட்ட பொலிசார்: பதறவைக்கும் ஒரு செய்தி
இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டரில் அமைந்துள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றிற்கு நேற்றிரவு பொலிசார் அழைக்கப்பட்டனர்.
ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட நபர்
நேற்றிரவு, 7.30 மணியளவில், இங்கிலாந்தின் மான்செஸ்டரிலுள்ள Blackley என்னுமிடத்தில் அமைந்துள்ள பெட்ரோல் நிலையத்தில் ஒருவர் தன் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துக்கொண்டதாக பொலிசாருக்கு தகவலளிக்கப்பட்டுள்ளது.
The Mirror
உடனடியாக அங்கு விரைந்த பொலிசார், அந்த நபரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
அவர் யார், அவர் தன் மீது ஏன் தீவைத்துக்கொண்டார் என்பது குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
சம்பவ இடத்துக்கு தீயணைப்புத்துறையினரும் விரைந்த நிலையில், அந்த பகுதிக்கு மக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. அந்த பெட்ரோல் நிலையமும் மூடப்பட்டுள்ளது.
Image: MEN MEDIA
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |