பிரித்தானியாவில் அரங்கேறிய பயங்கரம்! வீட்டினுள் வைத்து சுட்டுக்கொலை..பெண் உட்பட இருவர் கைது
பிரித்தானியாவில் நபர் ஒருவர் வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
துப்பாக்கியால் சுட்ட நபர்
டர்ஹாம் கவுன்டியில் உள்ள Elm தெருவில் 'தொந்தரவு' ஏற்பட்டதாக புகார் கிடைத்ததைத் தொடர்ந்து பொலிஸார் விரைந்தனர்.
அப்போது வடகிழக்குப் பகுதியில் 60 வயதான பேர்ரி டாவ்சன் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டது தெரிய வந்தது.
பக்கத்துக்கு வீட்டுக்காரரின் வீட்டு கமெராவில் பதிவான காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது வீட்டை நோக்கி வந்த இருவரில், ஒரு நபர் சாளரத்தின் வழியாக வெளியில் இருந்தே துப்பாக்கியால் சுட்டுள்ளார் என்பது தெரிந்தது.
இருவர் கைது
இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் 37 வயது ஆணும், 35 வயது பெண்ணொருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, கொலை சதித்திட்டம் தீட்டியதாக சந்தேகத்தின் பேரில் அவர்களை கைது செய்திருப்பதாக டர்ஹாம் பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், கொல்லப்பட்ட பேர்ரியின் நண்பர்கள் சிலர், அவர் முற்றிலும் ஒழுக்கமான மனிதர் என்றும், தவறான அடையாளம் காட்டப்பட்டதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |