பிரித்தானியாவின் லண்டனில் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் மரணம்
லண்டனில் உள்ள மதுபானவிடுதிக்கு வெளியே கும்பல் தாக்குதலில்ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள மதுபானவிடுதி ஒன்றுக்கு வெளிய, பொதுமக்களின் கண்முன்னே நடந்ததாக சந்தேகிக்கப்படும் கும்பல் தாக்குதலில், நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கிளாபம்
இங்கிலாந்து தலைநகர் லண்டனின் விரும்பத்தக்க இடமாக இருப்பது கிளாபம். இங்கு பல செல்வந்த குடியிருப்பாளர்கள் மற்றும் இளம் தொழில் வல்லுநர்கள் வசிக்கின்றனர்.

திங்கட்கிழமை இரவு, கிளாபம் (Clapham) நார்த் பகுதியில் உள்ள லேண்டார் மதுபான விடுதிக்கு வெளியே, அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
கும்பல் தாக்குதலில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதை பொதுமக்கள் பார்த்துள்ளனர். கொல்லப்பட்டவர் 25 வயது இளைஞர் என்று நம்பப்படுகிறது.
மூன்று துப்பாக்கிச்சூடு சத்தங்கள்
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினரும், மருத்துவ உதவியாளர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை தடயவியல் குழுக்கள் விசாரணை நடத்தி வருவதால், அந்தத் தெரு மூடப்பட்டு சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த அன்று, சுமார் 10 மணியளவில் மூன்று துப்பாக்கிச்சூடு சத்தங்கள் கேட்டதாக நேரில் கண்டவர்களும், குடியிருப்பாளர்களும் பீதியுடன் தெரிவித்தனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |