கல்லூரியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்
இந்தியாவின் பெங்களூருவில் ரயில் தண்டவாளத்தில் ஒரு இளம்பெண்ணின் உடல் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்
பொலிசார் அங்கு விரைந்த நிலையில், அது யாமினி பிரியா (20) என்னும் மாணவியின் உடல் என்பதும், அவர் தனியார் கல்லூரி ஒன்றில் B Pharma படித்துவந்தவர் என்பதும் தெரியவந்தது.
யாமினி, கழுத்தறுபட்ட நிலையில் இறந்துகிடந்துள்ளார். அவரது முகத்திலும் காயங்கள் இருந்துள்ளன.
முதல் கட்ட விசாரணையில், ஒரு இளைஞர் யாமினியை இரண்டு சக்கர வாகனத்தில் தொடர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
அந்த நபர் சில நாட்களாகவே யாமினியை பின்தொடர்ந்து வந்துள்ளதாகவும், யாமினியிடம் தன் காதலை வெளிப்படுத்தியதாகவும், ஆனால், யாமினி அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஆகவே, ஆத்திரமடைந்த அந்த நபர் யாமினியை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து அவரது கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு தப்பியோடியதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
அத்துடன், யாமினியைக் கொலை செய்த நபர், அதே பகுதியைச் சேர்ந்தவர்தான் என தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும், அவர் கைது செய்யப்பட்டதும் மேலதிக தகவல்களை அளிப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |