கோவாவில் நிகழ்ந்த இரட்டைக் கொலை: கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடும் குற்றவாளி
இந்தியாவின் கோவா மாநிலத்தில் நடந்த ஒரு இரட்டைக் கொலை குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், குற்றவாளி என சந்தேகிக்கப்படும் வெளிநாட்டவர் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்ட வண்ணம் இருக்கிறார்.
கோவாவில் நிகழ்ந்த இரட்டைக் கொலை
இந்தியாவின் கோவா மாநிலத்தில், டிசம்பர் மாதம் 24ஆம் திகதி Arambol என்னுமிடத்தில் கழுத்தறுபட்ட நிலையில் எலனா காஸ்தனோவா (Elena Kasthanova) என்னும் இளம்பெண்ணின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த புதன்கிழமையன்று, Morjim என்னுமிடத்தில், கழுத்தறுபட்ட நிலையில் எலனா வனீவா (Elena Vaneeva) என்னும் இளம்பெண்ணின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த இரட்டைக் கொலை தொடர்பில் ரஷ்ய நாட்டவரான அலெக்சி லியோனோவ் (Alexei Leonov) என்பவரை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடும் குற்றவாளி
விடயம் என்னவென்றால், அலெக்சியிடம் விசாரணை செய்யும்போது ஏராளமான கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டவண்ணம் இருக்கிறார் அவர்.
தன் தாய் தன்னை சிறுவயதில் கைவிட்டுவிட்டதாகவும், தன் தாயின் பெயர் எலனா என்றும், ஆகவே தனக்கு எலனா என்னும் பெயர் உள்ள பெண்களைப் பிடிக்காது என்றும், அதனால்தான் இந்த இரண்டு பெண்களையும் கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார் அலெக்சி.
அலெக்சியின் மொபைலில் நூற்றுக்கும் அதிகமான பெண்களின் புகைப்படங்கள் இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், வெளிநாட்டுப் பெண் ஒருவரை தான் கொலை செய்துவிட்டதாக கூறியிருந்தார் அலெக்சி.
விசாரணையில், அந்தப் பெண் ஏற்கனவே இந்தியாவை விட்டுச் சென்றுவிட்டதும், அவர் உயிருடன் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதேபோல பல கதைகளை விட்டுள்ளார் அலெக்சி. அவையும் பொய் என தெரியவந்துள்ளது.
இப்படி பல கதைகளை விடும் அலெக்சி, ஒருவேளை உண்மையான விசாரணையிலிருந்து பொலிசாரை திசை திருப்புவதற்காக அப்படிச் செய்யக்கூடும், அல்லது அவர் இப்படி கற்பனையாக கதைகளைப் புனையும் வழக்கம் கொண்டவராக இருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |