ஏராளமான புலம்பெயர்ந்தோரை ஐரோப்பாவிற்கு கடத்திய நபர் லண்டனில் கைது
ஏராளமான புலம்பெயர்ந்தோரை ஐரோப்பாவிற்கு கடத்திய சந்தேகத்திற்குரிய நபர் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐரோப்பாவிற்கு நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோரை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் மஜிட் முகமது (Majid Muhamad) என்பவர் லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் கைது செய்யப்பட்டார்.
இத்தாலிய அதிகாரிகள் அவரை கைது செய்ய சர்வதேச பிடிவாரண்டு பிறப்பித்திருந்தனர்.
54 வயதான முகமது, ஈரான், சிரியா, ஈராக், எகிப்து போன்ற நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோரை மத்தியதரைக் கடல் வழியாக இத்தாலிக்கு கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த புலம்பெயர் மக்களின் இறுதி இலக்கு பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஈராக் நாட்டவரை பிப்ரவரி 25-ஆம் திகதி தேசிய குற்றப் புலனாய்வுத் துறையின் (NCA) தேசிய நாடுகடத்தல் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவரை மே முதலாம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
இது குறித்து NCA அதிகாரி டோனி ஆலன் (Tony Allen) கூறுகையில்,
"இத்தாலியில் நூற்றுக்கணக்கான அகதிகளை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை மெருகூட்டிய புலனாய்வு நடவடிக்கையால் கைது செய்துள்ளோம். மனித கடத்தல் வலையமைப்புகளை உடைத்து ஒழிப்பது எங்கள் முக்கியமான நோக்கம்." என்று தெரிவித்தார்.
இந்நிலையில், பிரித்தானிய அரசு சிறிய படகுகள் மூலம் புலப்பெயர் மக்கள் நாட்டில் நுழைவதை தடுக்க புதிய எல்லை பாதுகாப்பு, அகதி மற்றும் குடியேற்ற மசோதாவை கொண்டு வந்துள்ளது.
இதன் மூலம், மனித கடத்தலை தீவிரவாத நடவடிக்கையாக கருதி கடுமையான தண்டனைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Migrants, Refugees