1 பில்லியன் டொலருக்கு நிறுவனத்தை விற்றுவிட்டு... இன்று வருவாய் ஏதுமின்றி வேலை தேடும் நபர்
மிக சமீபத்தில் பல மில்லியன் டொலர்களுக்கு அதிபதியாக இருந்தவர், தற்போது வருவாய் ஏதுமின்றி, வேலை கிடைக்க போராடி வருகிறார்.
வாழ்க்கையில் இனி என்ன
இந்திய வம்சாவளி வினய் ஹிரேமத் என்பவர் தனது நண்பர்கள் இருவருடன் இணைந்து உருவாக்கிய Loom நிறுவனத்தை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலருக்கு Atlassian என்ற நிறுவனத்திடம் 2023ல் விற்பனை செய்தார்.
இதில் 50 முதல் 70 மில்லியன் டொலர் வரையில் வினய் ஹிரேமத் சம்பாதித்துள்ளார். ஆனால் தற்போது வருவாய் ஏதுமின்றி, வேலை ஒன்றைத் தேடிக்கொள்ளும் கட்டாயத்திற்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.
33 வயதான வினய் ஹிரேமத் தமது வாழ்க்கை, பணம் மற்றும் நேரம் தொடர்பில் பகிர்ந்துகொண்டுள்ளார். முன்னர் சமூக ஊடக பக்கம் ஒன்றில் பதிவு செய்த வினய் ஹிரேமத், தமது வாழ்க்கையில் இனி என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் திட்டங்கள் இல்லை என்றும், பணம் சம்பாதித்துவிட்டேன் ஆனால் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என தெரியவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

ஆர்க்டிக் போர் உறுதி... ட்ரம்பின் கனவுத் திட்டத்திற்கு எதிர்பாராத மிரட்டல் விடுத்த விளாடிமிர் புடின்
அமெரிக்காவில் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் படித்தார், அங்கிருந்து வெளியேறி, பேஸ்புக் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக நான்கு மாத இன்டர்ன்ஷிப்பில் சேர்ந்தார்.
2012 ஆகஸ்டு மாதம் Backplane என்ற நிறுவனத்தில் பொறியாளராக இணைந்தார். இந்த நிறுவனத்தில் Shahed Khan என்பவரின் அறிமுகம் கிடைக்க, இருவரும் Loom நிறுவனத்தை உருவாக்க திட்டமிட்டனர்.
எதிர்காலம் கருதி
இதனிடையே, Backplane நிறுவனத்தில் இருந்து வெளியேறி 2013 செப்டம்பர் மாதம் Upthere என்ற நிறுவனத்தில் இணைந்துள்ளார். இந்த நிலையில் ஷாஹெத் கான், ஜாய் தாமஸ் என்பவர்களுடன் இணைந்து 2015ல் Loom நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
ஏப்ரல் 2020 இல் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பதவி உயர்வு பெறும் வரையில், அவர் தனது நிறுவனத்தில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக பொறியியல் தலைவராக இருந்தார்.
இந்த காலகட்டத்தில் தமது நிறுவனத்தில் இருந்து வழங்கப்பட்ட தக்கவைப்பு ஊக்கத்தொகையான 60 மில்லியன் அமெரிக்க டொலரை வினய் ஹிரேமத் நிராகரித்துள்ளார். சுமார் நான்காண்டுகள் வரையில் அவருக்கு அந்த தொகையை கைப்பற்ற வாய்ப்பு இருந்தும் அவர் பயன்படுத்தவில்லை என்றே தெரிவித்துள்ளார்.
Loom நிறுவனத்தை விற்பனை செய்த பிறகு 100 மில்லியன் டொலர் வரையில் ஆதாயம் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், 50 முதல் 70 மில்லியன் டொலராக இருக்கவே வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது வருவாய் ஏதுமின்றி வேலைக்கு தேடி வந்தாலும், எதிர்காலம் கருதி தாம் குறிப்பிட்ட தொகையை சேமித்து வைத்துள்ளதையும் பதிவு செய்துள்ளார். தற்போது தினமும் 5-8 மணி நேரம் இயற்பியல் படிப்பதாகவும், ஒரு வேலைக்கு முயன்று வருவதாகவும் ஹிரேமத் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |