வெறும் ரூ 4 லட்சத்தில் தொடங்கிய நிறுவனத்தை ரூ 1 லட்சம் கோடிக்கு விற்ற நபர்: தற்போது அவரின் முடிவு
பிளிப்கார்ட்டின் நிறுவனர் மற்றும் நவி குழுமத்தின் இணை நிறுவனருமான சச்சின் பன்சால் முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
நவி குழுமத்தின்
நவி டெக்னாலஜிஸ் மற்றும் நவி ஃபின்சர்வ் ஆகியவற்றின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பதவியில் இருந்து விலகுவதற்கான தனது முடிவையே சச்சின் பன்சால் அறிவித்துள்ளார்.
இருப்பினும் தொடர்ந்து நவி குழுமத்தின் நிர்வாகத் தலைவராகப் பணியாற்றுவார் என்றே தெரிவித்துள்ளார். தற்போது நவி டெக்னாலஜிஸ் மற்றும் நவி ஃபின்சர்வ் ஆகியவற்றின் தலைவர்களாக செயல்படும் ராஜீவ் நரேஷ் மற்றும் அபிஷேக் திவேதி ஆகிய இருவரும் புதிய தலைமை நிர்வாக அதிகாரிகளாக இந்த இரு நிறுவனங்களிலும் பொறுப்புக்கு வர உள்ளனர்.
தற்போது 43 வயதாகும் பன்சால் சண்டிகரில் பிறந்தவர். 2005ல் டெல்லி ஐ.ஐ.டியில் சிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். தொடர்ந்து Techspan நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார்.
ஆனால் சில மாதங்களிலேயே அங்கிருந்து விலகி, அமேசான் இணைய சேவைகளில் மூத்த மென்பொருள் பொறியாளராக இணைந்துள்ளார். 2007ல் அமேசான் நிறுவனத்தில் இருந்து விலகி தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்க பன்சால் முடிவு செய்தார்.
2007 அக்டோபர் மாதம் வெறும் ரூ 4 லட்சம் முதலீட்டில் சச்சின் மற்றும் பென்னி பன்சால் இணைந்து Flipkart நிறுவனத்தைத் தொடங்கினர். பெங்களூருவில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து தொடங்கப்பட்ட Flipkart தொடக்கத்தில் நூல்களை மட்டுமே இணையமூடாக விற்பனை செய்துள்ளது.
தனது பங்குகளை விற்று
படிப்படியாக எலக்ட்ரானிக்ஸ், ஃபேஷன் மற்றும் பிற முக்கிய வகைகளாக விரிவடைந்துள்ளது. மட்டுமின்றி, இந்தியாவில் மிகப்பெரிய இணையதள சந்தையாகவும் மாறியது.
2018ல், அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான வால்மார்ட், ஃபிளிப்காட்டை ரூ.1 லட்சம் கோடிக்கு கையகப்படுத்தியது. அத்துடன் ஒப்பந்தத்தின் அடிப்படையில், பன்சால் பிளிப்கார்ட்டில் தனது பங்குகளை விற்று நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.
ஃபிளிப்காட் நிறுவனத்தை விற்றதன் பின்னர் அங்கித் அகர்வால் என்பவருடன் இணைந்து நவி குழுமம் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனமானது டிஜிட்டல் கடன்கள், பரஸ்பர நிதி, காப்பீடு, டிஜிட்டல் தங்கம் மற்றும் ஒன்லைன் பணம் செலுத்துதல் உள்ளிட்ட துறையில் தனித்தனி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |